"முத்துப்பாண்டி" கோட்டைக்குள்ள.. முதல் மாநாடு.. மதுரையை தெறிக்க விட விஜய் திட்டம்!

Feb 23, 2024,12:42 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2ம் தேதி கட்சி ஆரம்பித்த விஜய், 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்துள்ளார். அதற்குள்  தனது திரையுலக கமிட்மென்ட்களை முடித்து விட விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சியையும் அமைப்பு ரீதியாக பலப்படுத்தி விடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கட்சியினரும் அரசியல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள் என்று விஜய் அறிவித்துள்ளார். மேலும் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளையும் விஜய் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.


கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று இருந்தது. தற்போது அதில் இருந்த ஒற்றுப்பிழை சரி செய்யப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என மாறியுள்ளது. தனது தவறை திருத்திக் கொண்ட விஜய்யின் இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அடுத்து, 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு, பிரமாண்ட முறையில் மாநில மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.


முதல் மாநாடாக மட்டுமல்லாமல் கட்சியின் தொடக்க விழா போலவும் இதை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளாராம். அந்த மாநாடு அனேகமாக ஏப்ரல் மாதத்தில் பிரமாண்ட அளவில் நடத்த உள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் பரவி வருகின்றன. விஜயகாந்த் தனது கட்சியை மதுரையில்தான் தொடங்கினார். கமல்ஹாசனும் மதுரையில் கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆர்  மேற்கு மாவட்டங்களுக்கும் கொடுத்த அதே முக்கியத்துவத்தை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கொடுப்பார். இப்படி அரசியல் ரீதியாக தென் மாவட்டங்கள் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. இதனால்தான் மதுரையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த விஜய் விரும்புவதாக தெரிகிறது.


மதுரைக்கும் விஜய்க்கும் நெருக்கமான தொடர்பும் உண்டு. அவரது கில்லி படத்தின் கதைக்களம் சென்னை மற்றும் மதுரைதான். அந்த வகையில் மதுரையில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு. எனவே மதுரையில் மாநாட்டை நடத்தினால் தொண்டர்கள் மத்தியில் அனல் பறக்கும் என்று நினைக்கிறார்களாம்.

விஜய் கட்சி ஆரம்பித்து 21 நாட்கள் தான் ஆகின்றன. இந்நிலையில் கட்சி தொடர்பான அடுத்த அடுத்த செயல்களில் விஜய் தீவிரம் காட்டி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்