ஆஹா.. விஜய் கட்சி கொடிக்கு இன்னும் ஒரு ஆட்சேபனை.. அது எங்க கலர்.. வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்!

Aug 24, 2024,01:54 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி அடர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும் இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன் என வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில தலைவர் அண்ணா சரவணன் என்பவர் அறிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதியில் அறிமுகப் செய்தார். இந்த கொடியின் மேலும், கீழும் அடர் சிவப்பு மற்றும் நடுவில் மஞ்சள் நிறம் இடம்பெற்று இருந்தன. அதேபோல்  நடுவில் இரண்டு போர் யானைகளுடன் வாகை மலரும் இருந்தது. இதனை தொடர்ந்து இக்கட்சி பாடலையும் வெளியிட்டார் இப்பாடல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 




ஆனால் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதுமே அடுத்தடுத்து பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதால் விஜயின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என அக்கட்சி ஆட்சேபனை தெரிவித்தது. அதேபோல செல்வம் என்பவர் விஜய் கட்சிக் கொடியில் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதாக சென்னை காவல் அலுவலகத்தில் விஜயின் மீது புகார் கொடுத்துள்ளார்.


அதேபோல மேலும் ஒருவரும் விஜய் கட்சி கொடி தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். தற்போது விஜய் கட்சி கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா சரவணன்  என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,


கடந்த 2016 ஆம் ஆண்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் எங்கள் கட்சி முறைப்படி, பத்திரப்பதிவுத் துறையில் இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் இயக்கத்தின் கொடியாக மேலும் கீழும் சிவப்பு வண்ணமும் நடுவில் மஞ்சள் வண்ணமும் இருக்கும். இதை எங்கள் நிகழ்வுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். 


இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ளார். சமீபத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார். அது அப்படியே எங்கள் இயக்கத்தின் கொடியாக உள்ளது‌. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கும் கொடி அறிமுகம் செய்ததற்கும் இடையே இரண்டு ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த நேரத்தில் கட்சிக்கொடி வண்ணம், சின்னம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். 


எத்தனையோ வண்ணங்களும் சின்னங்களும் இருக்கையில் ஏற்கனவே பயன்படுத்தி  வருபவற்றை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன..? வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் கட்சிக்கொடி வண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்  எங்கள் அமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொடியை பயன்படுத்தி வருகிறோம். விஜய் தன் கட்சிக்கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும் இல்லையென்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இன்னும் யாரெல்லாம் புகாருடன் காத்திருக்கிறார்களோ!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்