சென்னை: குழந்தை முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட நம்ம "தளபதி" விஜய் 40 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.. நடிப்பில்!
"வெற்றி தான் விஜய்யின் முதல் படம். அதில் ஆரம்பித்த சக்ஸஸ் இன்று திரையுலகில் 67 படங்களை பூர்த்தி செய்து, "லியோ" நடை.. அதாங்க சிங்க நடை போட்டு கொண்டிருக்கிறார்.
நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி "ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான்என்ன" என்று அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்துள்ளார் விஜய். "லெஜன்டு"களுக்கு ரஜினி அங்கிள்னா.. குழந்தைகளுக்கு "விஜய் அங்கிள்" என்றால் ஒரு தனி குஷி வந்துவிடும், அப்படி குழந்தைகள் மனத்திலும் இடம் பிடித்துள்ளார் விஜய்.
தளபதி விஜய் என்றாலே அடக்கம், அமைதி என்ற நல்ல குணங்கள் தான் நம்மக்கு சட்டென்று தோன்றும்.
ஆனால் அவர் ஆட ஆரம்பித்தால் போதும் "பீட்டர் பீட்ட ஏத்து.. பீட்டர் பீட்ட ஏத்து…" என்று நாமும் களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்து விடுவோம். நடனத்திலும் தளபதியை அடித்து கொள்ள முடியாது.
வெற்றியில் தொடங்கி வெற்றி நடை போட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டது நம்ம தளபதி விஜய்க்கு. அவரது இந்த திரைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்தால் நமக்குக் கிடைப்பது இந்த அட்டகாசமான பட்டியல்தான்!
1984-வெற்றி (விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம்)
1984-குடும்பம்
1985-நான் சிகப்பு மனிதன்
1986-வசந்த ராகம்
1987-சட்டம் ஒரு விளையாட்டு
1988-இது எங்கள் நீதி
1992-நாளைய தீர்ப்பு (ஹீரோவாக முதல் படம்)
1993-செந்தூரபாண்டி
1994-ரசிகன்
1995-தேவா
1995-ராஜாவின் பார்வையிலே
1995-விஷ்ணு
1995-சந்திரலேகா
1996-கோயம்புத்தூர் மாப்பிள்ளை
1996-பூவே உனக்காக (முதல் பெரிய பிரேக் கொடுத்த படம்)
1996-வசந்த வாசல்
1996-மான்புமிகு மானவன்
1996-செல்வா
1997-காலமெல்லாம் காத்திருப்பேன்
1997-லவ் டுடே
1997-ஒன்ஸ்மோர்
1997-நேர்க்கு நேர்
1997-காதலுக்கு மரியாதை (முதல் பிளாக்பஸ்டர் படம்)
1998-நினைத்தேன் வந்தாய்
1998-பிரியமுடன்
1998-நிலாவே வா
1999-துள்ளாத மனமும் துள்ளும்
1999-என்றென்றும் காதல்
1999-நெஞ்சினிலே
1999-மின்சாரா கண்ணா
2000-கண்ணுக்குள் நிலவு
2000-குஷி
2000-பிரியமானவளே
2001-ப்ரண்ட்ஸ்
2001-பத்ரி
2001-ஷாஜகான்
2002-தமிழன்
2002-யூத்
2002-பகவதி
2003-வசீகரா
2003-புதிய கீதை
2003-திருமலை (வெற்றிகரமாக ஓடிய முதல் அதிரடி ஆக்ஷன் படம்)
2004-உதயா
2004-கில்லி
2004-மதுர
2005-திருப்பாச்சி
2005-சுக்ரன்
2005-சச்சின்
2005-சிவகாசி
2006-ஆதி
2007-போக்கிரி
2007-அழகிய தமிழ் மகன்
2008-குருவி
2009-வில்லு
2009-வேட்டைக்காரன்
2010-சுறா
2011-காவலன்
2011-வேலாயுதம்
2012-நண்பன்
2012-துப்பாக்கி
2013-தலைவா
2014-ஜில்லா
2014-கத்தி
2015-புலி
2016-தெறி
2017-பைரவா
2017-மெர்சல்
2018-சர்க்கார்
2019-பிகில்
2021-மாஸ்டர்
2022-பீஸ்ட்
2023-வாரிசு
2023-லியோ
"விஜய் அங்கிள் , விஜய் அங்கிள்" என்று கூப்பிடும் குழந்தைகள் படை ஒரு பக்கம்.. "தளபதி" என்று அதிரும் இளைஞர்கள் படை மறு பக்கம்.. "தலைவரே" என்று களத்தில் விளையாடக் காத்திருக்கும் படை இன்னொரு பக்கம் என்று.. 80's,90's,2k kids, அது மட்டுமா நாளை 3k kids வந்தாலும் கூட அவர்களும் விஜய் பக்கமே திரண்டு நிற்பார்கள் போல!
அன்று சிறுவனாக வந்து இன்று தலைவனாக மாறியுள்ளார்.. "தளபதி" விஜய்யின் "வெற்றி" தொடர நாமும் வாழ்த்துவோம்!
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}