சென்னை: டிவியில் ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் விஜய் ஆதிராஜ். இப்போது திரைப்பட இயக்குநராக தனது 2வது படத்தை வித்தியாசமான கதைக் களத்துடன் களம் குதிக்கிறார். படத்திற்குப் பெயர் நொடிக்கு நொடி. ஷாம் மற்றும் அஸ்வின் குமார் இணைந்து நடித்துள்ளனர்.
முன்பெல்லாம் சன் டிவி சீரியல்கள் என்றாலே அங்கு விஜய் ஆதிராஜ் இல்லாமல் இருக்க மாட்டார். சூப்பர் ஹிட் சீரியல்கள் பலவற்றில் இடம் பெற்று நடித்து வந்தவர் விஜய் ஆதிராஜ். சித்தி உள்பட பல சீரியல்களை உதாரணமாக காட்டலாம். பிறகு திரைப்படங்களிலும்அவர் நடித்து வந்தார். விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
புத்தகம் என்ற படத்தின் மூலமாக திரைப்பட இயக்குநராகவும் மாறினார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்பட இயக்கத்தின் பக்கம் திரும்பியுள்ளார். 'நொடிக்கு நொடி' எனும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. நாக்ஸ் ஸ்டுடியோஸ்' ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜனரஞ்சகம் மிக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது 'நொடிக்கு நொடி'.
இதுகுறித்து விஜய் ஆதிராஜ் கூறுகையில், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது கனவு 'நொடிக்கு நொடி' மூலம் நனவாகிறது. பரபரப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பல ஆச்சரியங்கள் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை வெளியாகும் போது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று நம்புகிறேன்.
அம்ரேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகவும் திறமையான இசைக் கலைஞரான அவரது முழு பரிமாணமும் இப்படத்தில் வெளிப்படும். நான் இயக்கிய 'புத்தகம்' படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று திரையுலகில் முன்னணி எடிட்டராக திகழும் கெவின் 'நொடிக்கு நொடி' திரைப்படத்தின் தொடர்பை கையாளுகிறார். நம்ரிதா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் மேகா ராஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவுக்கு கோபிநாத், கலை இயக்கத்திற்கு ராமலிங்கம், நடனத்திற்கு ராஜு சுந்தரம், சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி என முன்னணி கலைஞர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். நிர்வாக தயாரிப்பாளர்கள்: ஜி கண்ணன் & பாலு கே நிமோ. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் 'நொடிக்கு நொடி'யை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!
98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!
பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!
Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!
Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
{{comments.comment}}