வளைச்சு வளைச்சு வாழ்த்து மழையில் நனையும் வடிவேலு.. பொறந்தநாளேச்சே!

Sep 12, 2023,05:09 PM IST
மதுரை: வைகை புயலுக்கு இன்று பிறந்த நாள்!

தமிழ்த் திரைப்படத்துறையில் வைகைப் புயல் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் வடிவேலு. அவருக்கு இன்று பிறந்த நாள். 

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்தியவர் வடிவேலு. நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்.. தனி ஸ்டைலை கொண்டு வந்தவர்.

வீச்சருவா வீராசாமி, சூனா பானா, தீப்பொறி திருமுகம், நாய் சேகர், ஸ்நேக் பாபு, என்கவுண்டர் ஏகாம்பரம், பாடி சோடா, வண்டு முருகன், அலாட் ஆறுமுகம் போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கக் கூடியவர். டிரண்ட் செட்டரும் கூட.

பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு. தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவைரயும் கவர்ந்தவர்.

நடராச பிள்ளை - வைத்தீஸ்வரி தம்பதிக்கு மகனாக, 1960ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி மதுரையில் பிறந்தவர்.  1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் மூலமாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார்.  அப்படத்தில் போடா போடா புண்ணாக்கு என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்.

ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும்.  இதை  தமது நகைச்சுவையில் இயல்பாக வெளிப்படுத்தியவர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருதும். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் டிவி விருதும் பெற்றுள்ளார்.



திரைப்பட துறையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தவர் தற்போது மீண்டும் கலக்கிக் கொண்டிருக்கிறார். காமெடியனாக,  குணச்சித்திர நாயகனாக, கதை நாயகனாக அதகளப்படுத்திய வடிவேலு மாமன்னன் படத்தில் அத்தனை பேரையும் விம்மி விம்மி அழவும் வைத்தார்.. எல்லோரையும் விலா நோகும் அளவுக்கு சிரிக்க வைக்கும் இந்த ஜாலி கலைஞனுக்கு நம்மோட வாழ்த்துகளையும் அள்ளி வழங்குவோம்.. !

வாங்கிக்கண்ணே!

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்