சென்னை: நடிகர் சூர்யா கங்குவா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கூடவே, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.. என ட்விட்டும் போட்டுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இது சூர்யாவின் 42 ஆவது படம். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஃபேண்டஸி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். 3டி படமாக வெளியாக உள்ள நிலையில், இப்படம் பத்து மொழிகளில் வெளிவர உள்ளதாம்.
சங்ககாலம் முதல் தற்போது உள்ள கால கட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாம். அண்மையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து டீசரும் வெளியானது. அப்போதிலிருந்து இப்போது வரை கங்குவா படத்தின் அர்த்தம் என்ன என்ற விமர்சனம் எழுந்தது. இது குறித்து இயக்குனர் சிவா கங்குவா என்பது ஃபயர் மேன் அதாவது நெருப்பு சக்தியுடன் கூடிய மனிதன் என விளக்கம் அளித்தார்.
இப்படத்தில் சூர்யா ஃபயர் மேன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கலந்த ஃபேண்டஸி படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழில் முதன் முறையாக திஷா பதானி மற்றும் பாபி தியோல் அறிமுகமாகியுள்ளனர். மேலும் நடராஜன், சுப்பிரமணியன், ஜெகதிபாபு, யோகி பாபு, ரெடின் கின்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், ரவி ராகவேந்திரா என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து காங்குவா படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் முன்னணி நடிகரான சூர்யாவின் காங்குவா படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் எனவும் ரசிகர்கள் இடையே எதிர் பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா காங்குவா படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ,மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாழ்த்தியுள்ளார்.
" Happy Pongal!
मकर संक्रांति शुभकामनाएँ!
ಎಲ್ಲರಿಗೂ ಸಂಕ್ರಾಂತಿ!ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!
అందరికి సంక్రాంతి!శుభాకాంక్షలు! அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா இந்த 2வது லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார். படம் குறித்த எதிர்பார்ப்பை இது மேலும் அதிகரித்துள்ளது.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}