ஊட்டியில் நடந்த .. சூர்யா 44 பட ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் விபத்து... நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Aug 09, 2024,06:16 PM IST

சென்னை: சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற வந்த நிலையில் திடீர் என நடிகர் சூர்யாவிற்கு விபத்து  ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 44. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன்பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.


இந்த படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன. தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்து சூர்யா 44 ரீலிசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் தொடர்ந்து பல சிகக்கல்களை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடந்து வந்தது. அங்கு அடிக்கடி பாம்புகள் தொல்லை செய்ததால் சூர்யா அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.




மேலும் படத்தில் நடிக்க புக் ஆகியிருந்த உரியடி விஜயக்குமார்  பாதியிலேயே விலகிக் கொண்டு விட்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்போது சூர்யா மற்றும் பூஜா ஹெட்டே இடையிலான ரொமான்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த மாதம் 15ம் தேதி வரை ஊட்டியில் படப்பிடிப்பு நடக்க இருந்தது.


இந்நிலையில், படப்பிடிப்பின் போது சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யா தற்பொழுது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சில நாட்களுக்கு ஓய்டு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து சூர்யா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும், சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நிகழ்ந்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்