கோழிக்கோடு: பெண் செய்தியாளர் தோளில் கை போட்ட முன்னாள் பாஜக எம்பி மற்றும் நடிகர் சுரேஷ் கோபி தனது செயலுக்காக வருத்தமும், அந்த பெண் செய்தியாளரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
தமிழில் அஜித்துடன் தீனா, விக்ரமுடன் ஐ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சுரேஷ் கோபி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் இருந்தவர். நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் கோபி, 2016ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார் சுரேஷ் கோபி. செய்தியாளர்கள் சந்திப்பின் போது பதிலளித்துக் கொண்டிருந்தபோது, தனக்கு அருகே இருந்து கேள்வி கேட்ட ஒரு பெண் செய்தியாளருக்குப் பதிலளிக்கும்போது அவரது தோளில் கை போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் செய்தியாளர் முதலில் விலகிச் சென்றார். ஆனால் சுரேஷ் கோபி விடவில்லை. மீண்டும் ஒருமுறை இதேபோல செய்தார் சுரேஷ் கோபி. இதனால் அந்தப் பெண் செய்தியாளர் அதிருப்தி அடைந்து, கையை வேகமாக தட்டி விட்டு நகர்ந்தார். ஆனாலும் அந்தப் பெண்ணைப் பார்த்தபடியே சிரித்துக் கொண்டே பேசினார் சுரேஷ் கோபி.
பெண் செய்தியாளரிடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்து கொண்ட இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. இதற்கு கேரள பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகளிர் அமைப்புகள், இடதுசாரி கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தற்போது வருத்தமும், மன்னிப்பும் கோரியுள்ளார் சுரேஷ் கோபி. இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறுகையில், நான் சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளரை பாசத்துடன் நடத்தினேன். ஒரு மகளாக நினைத்துத்தான் அப்படி நடந்து கொண்டேன். நான் யாரையும் பொது இடத்தில் எந்தச் சூழலிலும் அவமதித்தது இல்லை. ஆனால் அந்தப் பெண்ணின் மனது எனது செயலுக்காக காயப்பட்டிருந்தாலோ, அவமரியாதையாக உணர்ந்திருந்தாலோ அதை நான் மதிக்க வேண்டும். நான் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.. அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் கோபி.
சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!
அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!
தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!
Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்
நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
{{comments.comment}}