தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

Apr 18, 2025,05:44 PM IST

சென்னை: நடிகர் ஸ்ரீ  தற்போது மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கும் மாறும் அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


சின்னத்திரையில் கனா காணும் காலம் சீரியல் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஸ்ரீ  வெள்ளித்திரையில் வழக்கு எண் 18 கீழ் 9 திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் அடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் மூலம் புகழ்பெற்றார். இறுதியாக நடிகர் ஸ்ரீ நடிப்பில் வெளியான இறுக்கப்பற்று திரைப்படமும் பல்வேறு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு சமீப காலமாகவே வாய்ப்புகள் எதுவும் இன்றி, ஸ்ரீ நடிப்பில் படங்கள் ஏதும் வெளியாகவில்லை.




இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ யின் உடல்நிலை குறித்து  சோசியல் மீடியாக்களில் வினோதமான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பல்வேறு பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த வீடியோக்களில் நடிகர் ஸ்ரீ உடல் மெலிந்த தோற்றத்தில் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நடிகர் ஸ்ரீக்கு என்னாச்சு என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயத்தில் நடிகர் ஸ்ரீயின்  உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.


இதனையடுத்து, நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் அதற்கு முற்றுப் வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில்,


நடிகர் ஸ்ரீ தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது  ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 


நடிகர் ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம்.அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

அதிகம் பார்க்கும் செய்திகள்