வீரரை சுழற்றியடித்து.. வாகை சூடிய நடிகர் சூரியின் காளை கருப்பன்.. அலங்காநல்லூரில் அதிரடி!

Jan 16, 2025,04:46 PM IST

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த நடிகர் சூரியின் கருப்பன் காளை யாராலும் அடக்கப்படாமல் வெற்றி பெற்றது.


உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த போட்டியை காண உதயநிதியின் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். 


10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை காளைகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.  மாடுபிடி வீரர்கள் 6 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 4 பேரும், பார்வையாளர்கள் 3 பேரும் ஆக மொத்தம் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். 




இன்று நடைபெறும்  போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கார், டிராக்டர், ஆட்டோ, பைக், தங்ககாசு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், சுமார் 1000 காளைகளும், 750 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.


போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற காளைகள் ஒவ்வொன்றாக மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவசால் வழியாக அவித்துவிடப்பட்டது. நடிகர் சூரியின் காளை கருப்பன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் நடிகர் சூரியின் காளை யாராலும் அடங்கப்படாத காரணத்தினால் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான ஆட்டத்தை காண்பித்து பரிசை தட்டிச் சென்றது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்