"I feel sorry".. சால்வைக்குள் மறைந்திருந்த "அழகிய நட்பு".. வீடியோ வெளியிட்ட சிவக்குமார்.. சூப்பர்ல!

Feb 27, 2024,07:00 PM IST

சென்னை: நடிகர் சிவக்குமாரை மையமாக வைத்து சுழன்று வந்த சால்வைப் புயலுக்கு சிவக்குமாரே சூப்பராக முற்றுப் புள்ளி வைத்து விட்டார். இதில் என்ன அழகு என்றால்.. அந்த "சால்வைக்குள்" மறைந்து கிடந்த ஒரு "அழகான நட்பு" மொத்த உலகுக்கும் வெளிச்சத்திற்கு வந்து  சிவக்குமாரின் இன்னொரு பக்கம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


காரைக்குடிக்கு நடிகர் சிவக்குமார் சென்றிருந்தார். பழ கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்ற விழா. அதில் கலந்து கொண்ட சிவக்குமார், நிகழ்ச்சி முடிந்து மேடையிலிருந்து இறங்கி வந்தபோது ஒரு முதியவர், சிவக்குமாருக்கு சால்வை போர்த்த வந்தார்.. ஆனால் அந்த சால்வையை வாங்கி சிவக்குமார் கீழே தூக்கிப் போட்டார்.


இது பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி விட்டது. சிவக்குமார் இப்படிச் செய்யலாமா, பிடிக்காவிட்டால் வேண்டாம் என்று சொல்லியிருக்காலமே என்று பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே அவர் ஒரு முறை செல்போனை வாங்கி விசிறியடித்த சம்பவத்தையும், இதையும் வைத்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.


இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிவக்குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவுக்குள் போகப் போக அட.. சால்வை கிடக்குது.. இப்படி ஒரு அழகான நட்பை  சால்வைக்குள் போட்டு மறைத்து வைத்திருக்கிறாரே இந்த மனுஷன்.. எவ்வளவு அழகு.. என்ன ஒரு நட்பு என்ற ஆச்சரியம்தான் அனைவருக்கும் வரும்.. அந்த உரையாடலை நீங்களே பாருங்கள்.


(வீடியோவில் இருப்பது சிவக்குமார் - கரீம் (இவர்தான் சால்வை போர்த்த வந்த பெரியவர்)




சிவக்குமார்: எல்லோரும் அந்த காரைக்குடி மேட்டரைப் பார்த்திருப்பீங்க. இவர் யாரோ எவரோ இல்லை.. என் தம்பி .. 50 ஆண்டு கால நண்பர். 1971ல் மன்னார்குடியில் நாடகம் ஒன்றிற்கு தலைமை தாங்க வந்தேன்.. 


கரீம்: அப்ப அண்ணன் வந்தாக.. வந்து ரிசீவ் செய்தது நான்தான். நாடகமெல்லாம் முடிஞ்சு ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.. நான்தான் என்னண்ணே..  வந்தது முதலே சாப்பிடாமலேயே இருக்கீங்களே என்று கேட்டபோது,  2 நாளா தூக்கமே இல்லை. எப்போதும் நான் சாப்பிடும் வெங்காயமும், தயிர் சோறும் கொடுத்தால் போதும் என்றார்.


சிவக்குமார்: 1974ல் என் கல்யாணத்துக்கு வந்திருந்தார். 




கரீம்: வந்தது மட்டுமல்ல, வந்த எல்லோரையும் ரிசீவ் செய்தவர்களில் நானும் ஒருவன்.


சிவக்குமார்: இவருக்கு கல்யாணம் செஞ்சு வச்சதே நான்தான்.


கரீ்ம்: அண்ணன் அப்ப புதுப்பேட்டையில் இருந்தார். அங்க வரும்போதும் போகும்போதும் அம்மாவும் திட்டுவாங்க. ஏன்டா கல்யாணம் பண்ணாமலேயே சுத்துறே, அண்ணனுக்குத்தான் கல்யாணம் ஆயிருச்சே என்று சொல்வார். இதனால, அவரே பெண் பார்த்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்.


சிவக்குமார்: இவர் கல்யாணத்துக்கு மட்டுமல்ல, மகன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன்.. பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன்.. 




கரீம்: அவரே டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து விடுவார். இந்தக் காலத்துல இல்லை, அந்தக் காலத்துலேயே..  திருச்சிக்கு பிளைட் டிக்கெட் எடுத்துக் கொண்டு வருவார்.. தம்பி வந்துட்டேன்டா.. எங்க வரணும் என்பார். அவ்வளவு பாசம் உடையவர்.


சிவக்குமார்: எனக்கு யாராவது சால்வை போர்த்த வந்தால் திருப்பி அவர்களுக்கே போர்த்தி விடுவேன். எனக்கு சால்வை போர்த்தும் பழக்கமே கிடையாது. அன்னிக்கு சாயந்திரம், 6 மணிக்கு ஆரம்பிச்சு ஏழெட்டு பேர் பேச ஆரம்பிச்சு டயர்ட் ஆகி 10 மணி ஆகி விட்டது விழா முடிய. கிளம்பி வந்தபோது கரீம் நின்றிருக்கிறார். எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இந்த மனுஷன் கையில் சால்வை வைத்திருந்தார்.


கரீம்: என் மனைவி அப்பவே சொன்னா.. எடுத்துட்டுப் போகாதீங்கன்னு. சரி, நம்ம ஊருக்கு வந்திருக்கார்.. பெரிய மனுஷன் என்று சொல்லி நான்தான் எடுத்துட்டு வந்தேன். தெரிஞ்சும் எடுத்துட்டு வந்தது என்னோட தப்புத்தான்


சிவக்குமார்: தெரிஞ்சிக்கிட்டே கொண்டு வந்தது அவர் செய்த தப்புன்னா, பொது இடத்துல அதை வாங்கி கீழே போட்டது என் தப்புதானே.. அதுக்காக ஐ பீல் சாரி. ரொம்ப வருத்தப்படறேன்.




நெடுங்கால நண்பர்களுக்கு மத்தியில் நிலவி வந்த பாசத்தையும், நேசத்தையும் ஒரு சால்வை வந்து குறுக்கே பாய்ந்து குழப்பப் பார்த்துள்ளது.. அந்த குழப்பத்தைத்தான் சிவக்குமார் தூக்கிப் போட்டிருக்கிறார்.. அது பார்வையாளர்களுக்கு தவறான செய்தியை கொண்டு சேர்த்து விட்டது.. ஆனால் தாங்கள் இருவரும் செய்த தவறை இருவருமே உணர்ந்த உளப்பூர்வமாக அதற்காக வருத்தப்பட்டிருப்பது  வரவேற்கப்பட வேண்டியது.. பாராட்டப்பட வேண்டியது.. இந்த விவகாரத்தில் சால்வையை மறந்து விட்டு.. இவர்களின் அருமையான அந்த அழகான நட்பைத்தான் நாம் உச்சிமுகர்ந்து பாராட்ட வேண்டும்.


பெரிய மனிதர்கள் எப்பவுமே பெரிய மனிதர்கள்தான்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்