அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்.. அத்தானுக்கும் நன்றி!

Dec 04, 2024,04:40 PM IST

சென்னை: எனது மிகப்பெரிய உத்வேகங்களில் ஒருவர் எனது அக்கா. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தனது எக்ஸ் தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்  பதிவிட்டுள்ளார்.


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான திரைப்படம் தான் அமரன். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் ரேஞ்சே இதனால் மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.




மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையான அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. படத்தின் கதைக்களம் எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றதோ அதேபோன்று ஜீவி பிரகாஷின் இசையில் பாடல்களும் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது மின்னலே மின்னலே என்ற பாடல் தான் அனைவரின் ரிங்டோன் ஆகவும் இருந்து வருகின்றது. 


அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைத்து தரப்பிலும் பாராட்ட பெற்ற ஒரே திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான்.அதிலும் பிகில் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களின் சாதனைகளை முறியடித்து இன்று வரை திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. 


இதற்கிடையே கடந்த வாரம் நடிகை சிவகார்த்திகேயன் தனது மனைவி பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ராணுவ உடையில் சென்று தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதை ரீல்ஸ் ஆக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரும் வைரலானது.


இந்த நிலையில் இன்று தனது அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், எனது மிகப்பெரிய உத்வேகங்களில் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பு அக்கா!  குழந்தை பெற்ற பிறகு எம்பிபிஎஸ் படிப்பது முதல் 38 வயதில் தங்கப் பதக்கத்துடன் எம்டி பட்டம் பெறுவது வரை, இப்போது 42 வயதில் FRCPஐ அடைவது வரை, எல்லா முரண்பாடுகளையும் தாண்டிவிட்டீர்கள்.  அப்பா உண்மையிலேயே பெருமைப்படுவார். மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்கள்!   அன்புள்ள அத்தான், எப்போதும் அக்காவுக்கு துணை நிற்பதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


தற்போது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!

news

Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!

news

மார்கழி 12 திருவெம்பாவை பாசுரம் 12.. ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்!

news

மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

news

Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!

news

Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி

news

Gold rate.. தங்கமே தங்கம்.. இப்படி வித்தா எப்படிம்மா வாங்குறது.. சவரனுக்கு ரூ. 200 அதிகரிப்பு!

news

Nallakannu: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

news

மலையாள இலக்கிய உலகின் பிதாமகர்.. எழுத்தையே சுவாசித்தவர்.. மறக்க முடியாத எம்.டி. வாசுதேவன் நாயர்

அதிகம் பார்க்கும் செய்திகள்