தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

Dec 11, 2024,03:52 PM IST

சென்னை: Youtube சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு, ஐந்து கோடி ரூபாய் கேட்டு தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் வடிவேலு பற்றி அவதூறான எந்த கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிங்கமுத்து உத்திரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.


நடிகர் சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் வடிவேலு சிங்கமுத்து மீது மான நஷ்ட  வழக்கு தொடர்ந்தார். அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக அதனை ஈடு செய்ய ஐந்து கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தன்னைப் பற்றி அவதூறு பேச தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். 




இந்த வழக்கு கடந்த ஆறாம் தேதி விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு தெரிவித்த வார்த்தை எது என்பதை நடிகர் வடிவேலு குறிப்பிடவில்லை‌. மாறாக திரைத் துறையில் தெரிவித்த கருத்துக்களை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் எனக் கூறினார். அதேபோல்  நடிகர் வடிவேலு தரப்பில் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பார்ப்புவதாக வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிங்கமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இனிமேல் வடிவேலு பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில்  பேசமாட்டேன்  என  உத்திரவாதம் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில், வடிவேலு குறித்து  எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டேன். வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிவிக்க மாட்டேன்  என உத்தரவாதம் அளித்து மனு செய்தார். இதனை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கை  ஜனவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து ஆணை பிறப்பித்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tirunvannamalai Deepam 2024.. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு தடை!

news

திருவண்ணாமலை தீபம் 2024.. தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 3 நாட்கள் சிறப்பு ரயில்கள்!

news

Yearender 2024.. கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் எவை தெரியுமா?.. இந்தாங்க லிஸ்ட்!

news

Yearender 2024: இந்தியர்கள் விழுந்து விழுந்து எதைத் தேடிப் பார்த்திருக்கிறார்கள் பாருங்க!

news

தப்புத்தான்.. இனிமே வடிவேலு பத்தி அவதூறாக பேச மாட்டேன்.. கோர்ட்டில் உறுதி அளித்த சிங்கமுத்து!

news

புஷ்பா 2.. 2024ம் ஆண்டின் பிளாக் பஸ்டர் படம்.. 6 நாட்களில் 1000 கோடியைத் தாண்டுகிறது.. புது சாதனை!

news

மழை அப்டேட்: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை.. 11 மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு!

news

Proverbs: உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

பைக் டாக்ஸிகள் இயங்கலாம்.. ஆனால் விதி மீறலை அனுமதிக்க முடியாது.. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர்

அதிகம் பார்க்கும் செய்திகள்