சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த் மற்றும் அதிதி ராவின் திருமண வைபோகம் எளிமையான முறையில் கோவிலில் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன், அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சித்தார்த். இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட படமாக மக்களிடையே பாராட்டை பெற்றது . தற்போது இவர் ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக, பாடகராக, பன்முக திறமைக் கொண்ட நடிகராக உயர்ந்துள்ளார். 45 வயதாகும் சித்தார்த் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே 2007 ஆம் ஆண்டு பிரிந்தார்பாலிவுட் நடிகையாக இருக்கும் அதிதி ராவ், தமிழில் காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து மகா சமுத்திரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு தற்போது காதலாக மலர்ந்தது. இந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இதற்கிடையே சித்தார்த், அதிதி ராவ் காதலித்து வருவதாக செய்திகள் பரவின. பின்னர் இதனை உறுதிப்படுத்தவே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியிடுவோம் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தெலுங்கானா வனர்பதி மாவட்டத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற ரங்கநாயக சுவாமி கோவிலில், சித்தார்த் மற்றும் அதிதி ராவ் அவர்களின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இரண்டு வருடமாக காதலித்த அதிதிராவை கரம் பிடித்த சித்தார்த் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வில் இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தம்பதிகளின் திருமண புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}