"எனக்கு ஒரு wife வேணுமடா".. நானும் பார்த்தேன்.. பிடிச்சுப் போச்சு.. பாராட்டித் தள்ளிய சிவகார்த்திகேய

Mar 11, 2024,05:35 PM IST

சென்னை: சோசியல் மீடியாவில் ட்ரெண்டான எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது என பாராட்டியுள்ளார்.


கடந்த மார்ச் 3ஆம் தேதி எனக்கொரு wife வேண்டுமடா என்ற குறும்படம், ஃபிலிம் டியூட் youtube சேனலில் ரிலீஸ் ஆனது. பத்து நிமிடம் ஓடும் இந்த குறும்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 22 வருடங்களாக பத்திரிக்கை துறையில் பணியாற்றிய ஜியா இந்த குறும்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த குறும்படத்திற்கு முதல் முறையாக இசையும் அமைத்துள்ளார். 




இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்வன் என்ற குறும்படத்தை இயக்கியவர். இது இவருடைய இரண்டாவது குறும்படம் ஆகும். இந்த குறும்படத்தை ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். பிரசாத் ஏ.கே எடிட்டிங் செய்ய, அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இதில் செபாஸ்டின், அந்தோணி, அக்ஷயா, அனகா, வினிதா, மௌனிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த குறும்படம் ஹியூமர் கலந்த முழு நீள டிராமாவாக உருவாகியுள்ளதாம். மேட்ரிமோனியில் திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞன் ஒருவன், நான்கு பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.




இந்த நிலையில் இந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த குறும்படம் மிகவும் நன்றாக இருந்தது. என்னை பெரிதும் கவர்ந்தது. ஹியூமர் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது‌. ஜியாவுக்கு, அவரது மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதுபோல திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்