சென்னை: ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் பெண்கள் அரை குறை ஆடையுடன் முக்குக்கு முக்கு ஆடுவது பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. எனக்கு மட்டும் பவர் இருந்தால் புடுச்சு எல்லாத்தையும் உள்ளே போட்டு ஆயுள் தண்டனை கொடுப்பேன் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரிலான வாரா வாரம் பொது இடத்தில் மக்கள் கூடி மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கும் நிகழ்வுகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, கடலூர், சேலம் என்று பல்வேறு ஊர்களிலும் இது நடைபெறுகிறது.
அந்த ஊரின் முக்கியமான இடத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் இளைஞர்கள், இளம் பெண்கள்தான் அதிகம் திரளுகிறார்கள். கூடி ஆடிப் பாடுகிறார்கள். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குழந்தைகளுக்கும் இதில் பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வாரம் முழுவதும் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு இந்த ஒரு நாள் சற்று ரிலாக்ஸ் தரட்டும் என்ற நோக்கில் இது நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கலாச்சாரத்தை கிண்டலடித்து விமர்சித்துள்ளார் நடிகர் ரஞ்சத். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீப காலமாக நிறைய மனக்கசப்பான சம்பவங்கள் நடக்குது. முக்குக்கு முக்கு எங்க பார்த்தாலும் தெருவில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நடக்குது. எங்கருந்ததுடா வர்றீங்க நீங்கல்லாம்.. உங்க அம்மா அப்பா யாரு. இதை டிவியில பார்த்து, அதுவும் கோயம்பத்தூர்ல ஆர்எஸ்புரத்துல.. எனக்கெல்லாம் அரசு அதிகாரி பவர் இருந்தா புடுச்சு ஆயுள் தண்டனைதான் கொடுப்பேன்.
பூராப் பேரும் அரைகுறை ஆடையோட, யார் வேண்டுமானாலும் யாரோட வேண்டுமானாலும் ஆடுவது. கூத்தடிப்பது. இதுக்குப் பாராட்டு.. தொலைக்காட்சி, பத்திரிகைகள் இதை பாராட்டுகின்றன. பெற்றோர்கள் தயவு செய்து, இது அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகும். தாய்லாந்து போலவோ, சிங்கப்பூர் போலவோ வரக் கூடாது.. வரவும் விடக் கூடாது.
இதே கோயம்பத்தூர்ல,அழகா, நல்லா புடவை கட்டி குடும்பத்தோட வள்ளிக்கும்மிங்கிற நடனத்தை எல்லோரும் ஊக்குவிக்கணும். இந்த நிகழ்ச்சி எங்க போட்டாலும் நான் போயிருவேன். இதுதானே கலாச்சாரம்.. மனசார சந்தோஷப்பட்டு வந்திருக்கேன். அழிந்து போன, கண்ணியம் காக்குற கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய் தர்றது நம்மோட கடமைன்னு நினைக்கிறேன் என்றார் ரஞ்சித்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது
ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இடைவிடாமல் பலத்த மழை பெய்யக் கூடும்.. IMD
புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்
ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!
Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!
ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!
அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவையும் ரத்து
{{comments.comment}}