சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு புகழ்பெற்ற ராஜு பன் பட்டர் ஜாம் மூலம் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
பிக் பாஸ் புகழ் ராஜு விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதன் பின்னர் நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், உள்ளிட்ட படங்களில் குணசேத்திர வேடங்களிலும் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜூ. இதன் மூலம் பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமாக அறியப்பட்டார்.

இப்படியாக தனது கேரியரில் படிப்படியாக முன்னேறி வெற்றி முகத்தை கண்ட ராஜு ஒரு கட்டத்தில் விஜய் ஸ்டார்ஸ் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராகவும் விளங்கினார். சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து அவ்வப்போது வெள்ளித்திரைகளிலும் சிறு சிறு ரோல்களிலும் நடித்து, பின்னர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ராஜு தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் ஹூரோவாக அறிமுகமாகும் படத்திற்கு பன் பட்டர் ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் பன் பட்டர் ஜாம் படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜீரோ படத்திற்கு வசனம் எழுதியவர். அதேபோல் பாரம் படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் வசனம் எழுதியதற்கு தேசிய விருதும் பெற்றவர். காலங்களில் அவள் வசந்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக தோன்றியவர். தற்போது ராஜு நடிக்கும் பன் பட்டர் ஜாம் படத்தையும் இயக்குகிறார்.இது இவருக்கு இரண்டாவது படம்.

இதில் ஆதித்யா, பிரசாத், பவ்யா தாரிக்கா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தற்போது உள்ள காலகட்டத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கும் இன்றைய இளைஞர்களை பற்றிய கதையாகும். ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அந்தக் கணத்தை சந்தோஷமாக வாழ பழகினால் வாழ்க்கையில் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவான கருத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்ப ததும்ப உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில் இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் வரும் ஜூலை எட்டாம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.
சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!
Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
{{comments.comment}}