ஜேடிஎஸ் கட்சியிலிருந்து காங்கிரஸுக்குத் தாவினார் .. நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா

Apr 29, 2023,12:53 PM IST
பெங்களூரு: தேர்தல் சமயத்தில் அங்கிருந்து இங்கு தாவுவதும், இங்கிருந்து அங்கு போவதும் சகம்ஜான்.  அந்த வகையில், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

முன்னாள் கர்நாடக முதல்வர் பங்காரப்பாவின் மகள்தான் கீதா. இவர் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ் குமாரை மணந்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து வந்தார் கீதா ராஜ்குமார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இவரது சகோதரர்கள் மது பங்காரப்பா, குமார் பங்காரப்பா ஆகியோரும் கூட அரசியலில் உள்ளனர்.



மது பங்காரப்பா ஜேடிஎஸ் கட்சியில் இருந்தார். அதிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சொரபா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல இன்னொரு சகோதரரான குமார் பங்காரப்பா அதே சொரபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது கீதாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு சிவராஜ்குமாரும் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது மனைவியின் முடிவை மதிப்பதாகவும் ,அவரை ஆதரிப்பதாகவும்  சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். தனது மைத்துனர் மது பங்காரப்பாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

அரசியல் பக்கம் தலைவைத்துக் கூட படுக்காதவர் ராஜ்குமார். ஆனால் அவர் ஒன்று சொன்னால் கேட்காத கர்நாடக அரசியல் தலைவரே கிடையாது. அந்த அளவுக்கு கர்நாடக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஜ்குமார். மிகப் பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்தவர். இன்று அவரது குடும்பம் காங்கிரஸ் பக்கம் சாய்ந்திருப்பது பாஜகவுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்