மீண்டும் விறுவிறுப்படையும்.. வேட்டையன் ஷூட்டிங்.. மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்

May 02, 2024,12:28 PM IST

சென்னை:  நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படப்படிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை  இயக்கிய இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த ஆண்டில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன் 600 கோடி அளவில் வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டிஜே  ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது மும்பையில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில், ரஜினிகாந்த்-மஞ்சு வாரியர் பாடல் காட்சிகள் மலையாள பட ஸ்டைலில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினி காரை விட்டு இறங்கி கம்பீரமாக நடந்து சென்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்