சூப்பர் ஸ்டாரின் மாஸ் படங்கள் இன்று முதல் மார்ச் 14 வரை ரீ ரிலீஸ் கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!

Mar 08, 2024,11:05 AM IST

சென்னை: ரஜினிகாந்த் திரைப்பட விழா கொண்டாட்டம் ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இன்று முதல் மார்ச் 14ஆம் தேதி வரை ரீ ரிலீஸ் செய்ய பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


சென்னையில், பி வி ஆர் ஐ நாக்ஸ் சார்பில்  திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  காலா, பாபா, 2.0, சிவாஜி, முத்து, தர்பார், உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை மார்ச் 8 முதல் மார்ச் 14 வரை ரீ ரீலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


சமீப காலமாக பிரபல நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வது  பேஷனாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் நாயகன் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். 


இதனை தொடர்ந்து ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை மீண்டும் திரையிட திட்டமிட்டுள்ளனர். இதனால்  ரஜினி ரசிகர்கள் இந்தத் திரைப்பட விழா கொண்டாட்டத்திற்கு தடபுடலாக தயாராகி வருகின்றனர்.




ரஜினிகாந்த் பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகம் படம் மூலம் அறிமுகமானவர். ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தனது நடிப்பின் திறமையால் நடிகராக உருவாக்கி பல்வேறு படங்களில்  ஹிமாலய சாதனையை புரிந்து சூப்பர் ஸ்டாராக திகழ்பவர். இவர் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு படங்களில் தயாரிப்பாளராகவும், திரைகதை எழுத்தாளராகவும் பணிபுரிந்தவர்.


இவரின் திரைப்படங்கள் என்றாலே சும்மா மாஸாக பட்டய கிளப்பும் வகையில் அமைந்திருக்கும். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் நடித்த முத்து, பாஷா, படையப்பா, அருணாச்சலம், எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படங்கள் அனைத்தும் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனது ஸ்டைல், வசீகரம், நடை, உடை, முக பாவனை, போன்றவற்றால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர். 


இவரின் ரசிகர்கள் இவரைச் செல்லமாக தலைவா, சூப்பர் ஸ்டார்  என அழைக்கின்றனர். இவர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் சார்பில் ஆறு முறை சிறந்த நடிருக்கான விருதையும், பல்வேறு ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இது தவிர 2004 ஆம் ஆண்டு  நடிப்பில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதமாக , இவருக்கு பத்ம பூசன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கிஜானுக்கு அடுத்தபடியாக இவர் தான் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்