முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு.. போயஸ் கார்டனில்..மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்..!

Feb 24, 2025,06:14 PM IST

 சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரெக்கை கட்டி பறந்த ஜெயலலிதா தமிழக அரசியலிலும் வரலாற்று சாதனை படைத்த ஒப்பற்ற தலைவியாக வீறு நடை போட்டவர். இவர் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், 6 முறை முதலமைச்சராகவும்  இருந்தவர். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தை திட்டம், பெண் சிசுக்கொலை, 69 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற சிறப்பான பல திட்டங்களால்  மக்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தவர். யாருக்கும் பயப்படாமல்  தவறு என்றால் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற  கர்ஜனையான பேச்சால் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிறந்த பெண்மணி. இதனால் இவரை இரும்புப் பெண்மணி எனவும் மக்கள் அழைத்தனர்.  மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற சூளுரையால் தமிழக மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வகையில்  அசைக்க முடியாத சாம்ராஜியத்தை கட்டி காத்தவர். இதனால் மக்கள் அம்மா என்று அன்புடன் அழைத்த  முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் இன்று.




முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காமராசர் சாலையில்  உள்ள அவரது நினைவிடத்தில்,  தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


அதே சமயத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அதிமுக  கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார். அதன்பின்னர், 77 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அக்காட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். 


இந்த நிலையில், மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.


பல வருடங்களுக்குப் பிறகு போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை காலமாக ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தாத நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!

news

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

news

பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்