சென்னை: விஜய் மாநாட்டையும், அதில் அவர் பேசிய பேச்சையும் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தவெகவினர் எதிர்பாராத வகையில் ஒரு பூஸ்ட் கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். அரசியல் தலைவராக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவரது தலைமையில் விக்கிரவாண்டி வி சாலையில் நடந்த மாநாடு அரசியல் அரங்கில் பல்வேறு பிரளயங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அதில் பேசிய பேச்சு இன்று வரை பேசு பொருளாக அனைத்து தொலைக்காட்சி விவாத மேடைகளையும் அதிர வைத்து வருகிறது.
மறுபக்கம் விஜய் பேச்சு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை வாரிக் குவித்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகின்றன, விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், விஜய் மாநாட்டுக்கு ஒரு பெரும் பாராட்டு எதிர்பாராத இடத்திலிருந்து வந்துள்ளது. அதுதான் ரஜினிகாந்த்.
விஜய்க்கு முன்பாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினிகாந்த். கமலுக்கும் முன்பாகவே அவர் எதிர்பார்க்கப்பட்டார். அரசியலுக்கு வரப் போவதாக ரஜினியும் கூட அறிவித்தார். ஆனால் இடையில் கொரோனா குறுக்கிட்டதால் அதைக் காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்குப் போட்டு விட்டார் ரஜினிகாந்த். அதேசமயம், திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினிக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டார். இந்த நிலையில்தான் விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி, வி. சாலையில் நடைபெற்றது. அதில் விஜய் அனல் தெறிக்கப் பேசினார். தனது கட்சியின் அரசியல் வழிகாட்டித் தலைவர்கள், கொள்கை, இலக்கு, அரசியல் எதிரிகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கமாக பேசினார். அந்தப் பேச்சுதான் இன்று வரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடும் விமர்சன மழையில் நனைந்து கொண்டிருக்கும் விஜய்க்குப் பாராட்டு மழை பொழிந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். போயஸ் தோட்டத்திற்கு வெளியே தனக்கு தீபாவளி வாழ்த்து கூற குவிந்திருந்த ரசிகர்களிடையே ரஜினிகாந்த் பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள், ரஜினிகாந்த்திடம், விஜய் மாநாடு குறித்து கேட்டபோது, மாநாடு உண்மையில் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்கள் தொடர்ந்து, மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து கேட்டபோது, வணக்கம் என்று கூறி அதுகுறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை. புன்னகையுடன் நகர்ந்து சென்றார்.
முன்பு இதுபோல விமான நிலையத்தில் வைத்து ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, என்னிடம் அரசியல் குறித்துப் பேசாதீங்க என்று சொன்னேனா இல்லையா என்று கடிந்து கொண்டிருந்தார். ஆனால் இன்று விஜய் மாநாடு மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதாக ரஜினிகாந்த் கூறியுள்ளது, தவெக கட்சியினரை உற்சாகமடைய வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}