பிரதமர் மோடி குறித்த கேள்வி.. அரசியல் வேண்டாமே.. பதில் சொல்வதைத் தவிர்த்த ரஜினிகாந்த்.. என்னாச்சு!

May 29, 2024,05:55 PM IST

சென்னை:   பிரதமர் மோடி குறித்து எப்போது செய்தியாளர்கள் கேட்டாலும் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லத் தவறாத நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர் மோடி குறித்து ரஜினிகாந்த்திடம் பலமுறை கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளன. ஒருவன் பத்து பேரை எதிர்த்து நிற்கிறான் என்றால் அந்த பத்து பேர் பலசாலியா அல்லது அந்த ஒருவன் பலசாலியா என்று ஒருமுறை மோடியைப் புகழ்ந்து செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்  ரஜினிகாந்த். அதேபோல பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும், கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்று பாராட்டிப் பேசியிருந்தார்.




இப்படி ஒவ்வொரு முறையும் பிரதமர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கத் தவறியதில்லை ரஜினிகாந்த். இந்த நிலையில் இன்று இமயமலை பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் பிரதமர் மோடி குறித்து கேட்டனர். அதாவது மீண்டும் பிரதமராக மோடி வருவாரா என்று அவர்கள் ரஜினியிடம் கேட்டனர். சரி ஏதாவது ஒரு பரபரப்பான பதிலை ரஜினி சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் செய்தியாளர்கள் காத்திருந்தனர்.


ஆனால் ரஜினியோ சடாரென்று அரசியல் கேள்விகள் வேண்டாமே என்று கூறி விட்டார். இந்தப் பதிலை செய்தியாளர்கள் எதிர்பார்க்கவில்லை. மோடி குறித்து கேட்டால் நிச்சயம் ஏதாவது பதில் சொல்வார் ரஜினி என்ற எதிர்பார்ப்பு இன்று பொய்த்துப் போனது. ரஜினி ஏன் பிரதமர் மோடி குறித்து பதிலளிக்க யோசித்தார் என்று தெரியவில்லை. லோக்சபா தேர்தல் கடைசிக் கட்டத்தை எட்டி விட்டது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார். கன்னியாகுமரியில் இடைவிடாத தியானத்தில் ஈடுபடவுள்ளார்.


இப்படிப்பட்ட நிலையில் ரஜினி வாயிலிருந்து பிரதமர் மோடி குறித்து ஏதாவது வராதா என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அவரது பதில் ஏமாற்றத்தையேக் கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  வட மாநிலங்களில் இன்னும் ஒரு கட்ட வாக்குப் பதிவு நடைபெற வேண்டியுள்ளது. ஏற்கனவே அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்கு ரஜினிகாந்த் வந்ததையே பாஜகவினர் தங்களுக்கு சாதகமாக வட மாநிலங்களில் பயன்படுத்திக் கொண்டதாக ஒரு சலசலப்பு எழுந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்பது குறித்து தான் ஏதாவது கூறப் போக அது வேறு ஏதாவது புதிய சர்ச்சையைத் தூண்டி விட்டு விடலாம் என்றுதான் அந்தக் கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்காமல் தவிர்த்து விட்டதாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்