அசத்திய "டாப் ஸ்டார்".. தூத்துக்குடியில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய பிரசாந்த்!

Jan 03, 2024,05:06 PM IST

 தூத்துக்குடி: தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் பிரசாந்த் நிவாரண பொருட்களை வழங்கினார்.


வடகிழக்கு பருவமழை தீவிர அடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.  இதில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழையில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.


இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவிகள் வழங்கி வருகின்றன. தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6000மும், மற்றவர்களுக்கு ரூ.1000மும் வழங்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர். 




இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


சமீபத்தில்தான்  நடிகர் விஜய் தூத்துகுடி, நெல்லை மக்களுக்கு நேரில் வந்து நலத்திட்ட உதவிகளை நேரில் வந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரஷாந்த்தும் நேரில் வந்து உதவிகளை வழங்கி மக்களை மகிழ்வித்துள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்