ஹெல்மட் போடாம.. ஆங்கருடன் பைக்கில் ரைடு போய் அபராதம்.. பிரஷாந்த் சொன்ன சூப்பர் விளக்கம்!

Aug 03, 2024,04:10 PM IST

சென்னை: தனியார் நிறுவனத்தின் பேட்டியின்போது பேட்டி கண்ட ஆங்கருடன் பைக்கில் ஹெல்மட் போடாமல் பயணித்து அபராதம் விதிக்கப்பட்டது குறித்து நடிகர் பிரஷாந்த் சூப்பரான விளக்கம் கொடுத்துள்ளார்.


காதல் இளவரசன், டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் பிரஷாந்த். அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் அந்தகன். இப்படம் வருகிற 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இதற்கான புரமோஷன், பத்திரிகை பேட்டிகளில் பிசியாக இருக்கிறார் பிரஷாந்த்.


அந்த வகையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளிப்பதற்காக வித்தியாசமான உத்தியைக் கையாண்டனர். அதாவது ஆங்கர் பைக்கின் பின்னால் அமர்ந்து கொள்ள பைக்கை ஓட்டியபடி பேட்டி கொடுத்தார் பிரஷாந்த். இதுவரை எல்லாமே ஓகேதான். ஆனால் ஹெல்மெட் போடாமல் பிரஷாந்த் பைக் ஓட்டியதால் சமூக வலைதளங்களில் இது பேசு பொருளானது. அவருக்கு காவல்துறை அபராதம் விதித்ததால் மேலும் பரபரப்பானது.


இந்த நிலையில் திருச்சியில் அந்தகன் படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரஷாந்த். அப்போது அவர் கூறியதாவது:




நானும்,  நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த அந்தகன் படத்தில் நான் கண் தெரியாதவனாக நடித்துள்ளேன்.  இது சவால் நிறைந்த கேரக்டர் என்று என்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தெரிந்து கொண்டேன்.  சிறந்த கதை மற்றும் திரைக்கதை உள்ள படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இந்தப் படத்தில் காதல்,சண்டை திரில்லர், பாடல் என அனைத்தும் உள்ளது.


அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம், அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.


இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை  ரீமெட் படம் 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும். தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது. திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கும்


இந்தப் படத்தில் சிம்ரன், ஊர்வசி, கார்த்திக், வனிதா, மோகன்வைத்தியா ஆகியோர் நடிப்பு உங்களை பெரிதும் கவரும். படம் வெளியாவதற்கு முன்பு திருட்டுத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதால் சினிமா தொழில் நசிந்து போய்விடும். சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் ரீல்ஸ் வெளியிடுவது ஆபத்தானது.


நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம் மக்களுக்கு நல்லது செய்பவர்களை நான் ஆதரிப்பேன். தமிழகம் முழுவதும் அந்தாகன் வட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன் 


ஹெல்மெட் முக்கியத்துவம் 


இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவசியம் ஹெல்மெட் அணிந்து நிதானமாக செல்ல வேண்டும். கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது. 


வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்  பிரஷாந்த்.

சமீபத்திய செய்திகள்

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்