சென்னை: அஜீத்துடன் இணைந்து தான் நடிக்கப் போவதாக நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கியமான ஹீரோவாக வலம் வந்தவர் பிரசன்னா. அதன் பிறகு கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அவரது நடிப்பிலேயே அஞ்சாதே படத்தில் வந்த அந்த நெகட்டிவ் ஷேடுதான் இன்று வரை அவரது சிறந்த நடிப்புக்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு நாள் படத்திலும் அவரது கேரக்டர் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து நடிக்கப் போகிறார் பிரசன்னா. இதை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:
எனது அருமை நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் ஒரு செய்தி.. இந்த முறை நமது அன்புக்குரிய தல அஜீத் குமாருடன் இணைந்து நடிக்கப் போகிறேன். கனவு நனவானது போல உள்ளது. மங்காத்தா டைமிலிருந்தே ஒவ்வொரு அஜீத் படம் அறிவிக்கப்படும்போதும் அதில் நான் இருப்பேனா என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே வந்தது. காரணம், ஒவ்வொரு படத்திலும் எனது பெயர் அடிபட்டது. அவரது ரசிகர்களும் என்னை வாழ்த்திக் கொண்டேதான் இருந்தனர். இப்போது அது உண்மையாகியுள்ளது.
அஜீத்தின் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன். பலமுறை கைக்கு வந்தது வாய்க்குக் கிடைக்கவில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இப்போது குட் பேட் அக்லி படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன். கடவுளுக்கு நன்றி, அஜீத்துக்கு நன்றி, ஆதிக் ரவிச்சந்திரன், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவீஸ் ஆகியோருக்கும் நன்றி.
அஜீத் படத்தில் நடிக்கவிருப்பது திரில்லாகவும் எக்சைட்டிங்காகவும் இருக்கிறது. இப்போது வேறு எந்த தகவலையும் தர முடியாது. சில நாள் ஷூட்டிங் முடிந்துள்ளது. ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும்.. அஜீத்தை ஏன் இத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பதை அந்த சில நாள் ஷூட்டிங்கிலேயே தெரிந்து கொண்டேன். மிக மிக எளிமையான மனிதர், மனித நேயம் மிக்கவர், மிகவும் இயல்பாக பழகுகிறார்.. அனைத்துக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பிரசன்னா.
சமீபத்தில்தான் பிரசன்னாவின் மனைவியும் நடிகையுமான சினேகா, விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் அசத்தலான ரோலில் நடித்திருந்தார். இந்த நிலையில் சினேகாவின் கணவர் பிரசன்னா, அஜீத்துடன் இணைந்து கலக்கப் போகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}