ஹாய் செல்லம்.. மீண்டும் இணையும் விஜய் - பிரகாஷ்ராஜ்.. மறக்க முடியாத மேஜிக்கல் காம்போ!

Oct 04, 2024,06:14 PM IST

சென்னை: விஜய்யின் சினிமா பயணத்தில், விஜயின் இறுதிப் படமான தளபதி 69 படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இருவரும் இணைந்து படைத்த திரை விருந்துகளை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க முடியாது.


நடிகர் பிரகாஷ் ராஜ் நடிகர், இயக்குனர், தொகுப்பாளர், தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்டவர். இது மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 


மிரட்டிய கில்லி:




தமிழில் டூயடம் படம் மூலம் கே. பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ் ராஜ், அதன் பிறகு ஆசை உள்ளிட்ட பல்வேறு படங்களில் வித்தியாசமான வில்லத்தனம் செய்து மக்களிடையே படு வேகமாக பிரபலமானவர், மக்கள் மனங்களைக் கவர்ந்தார். 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அந்தஸ்து பெற்று மிகப்பெரிய இடத்திற்கு சென்றவர் தான் பிரகாஷ்ராஜ்.


இப்படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அதிலும் இவர் பேசும் ஹாய் செல்லம் என்ற வசனம் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பிரகாஷ் ராஜ் என்றதுமே உடனே இந்த செல்லம்தான் ஞாபகத்துக்கு வரும். இப்படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜின் நடிப்பு ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமைந்தது. மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கில்லி மாபெரும் வெற்றி பெற விஜய் - பிரகாஷ் ராஜ் - திரிஷா ஆகியோரின் பங்களிப்பு மிகப் பெரியது.


பட்டையைக் கிளப்பிய சிவகாசி:




இதே படம் கடந்த 20/4/2024 ஆம் ஆண்டு 20 வருடம் கழித்து மீண்டும் திரையிடப்பட்டத.  அப்போதும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல  வரவேற்பு பெற்றதுடன் ரசிகர்களிடையே இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு மீண்டும் விஜய்யுடன் சிவகாசி படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். 


சிவகாசி படத்தில் பிரகாஷ் ராஜ் கலக்கியிருப்பார். இப்படத்தில் விஜயின் அண்ணனாக உடையப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படமும் பிரபலமாக பேசப்பட்டது. அதேபோல் இப்படத்தின் பாடல்களும் சென்டிமென்ட் காட்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது. 


பொளந்து கட்டிய போக்கிரி:




சிவகாசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன், பிரபுதேவா இயக்கத்தில் உருவான போக்கிரி படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் இப்படம் கவர்ந்தது. அதிலும் பிரகாஷ்ராஜின் அலிபாய் என்ற கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டதுடன் திருப்பாச்சி படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 


இப்படம் நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அதேபோல் வடிவேலின் நகைச்சுவையையும் இப்படத்திற்கு சிறப்பாக அமைந்தது. போக்கிரி படம் இன்று வரை விஜய்  ரசிகர்களின் மிகப் பெரிய விருப்பப் படமாக இருந்து வருகிறது. விஜய்யை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்திய படம் போக்கிரி.


ஏமாற்றம் தந்த வில்லு:




போக்கிரி படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் கூட்டணியில்  வில்லு படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார். இப்படத்திலும் பிரகாஷ்ராஜ் ஜே.டி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம்  ஓரளவே வெற்றி பெற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஆதி திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இப்படம் சரியாகப் போகவில்லை.


ஆதி படத்தின் தோல்வியை அடுத்து நீண்ட இடைவெளி விட்டனர் இருவரும். அதன் பிறகு கடந்த ஆண்டு வாரிசு படத்தில் விஜயுடன் கைகோர்த்தார் பிரகாஷ்ராஜ். இப்படத்தில் விஜய்யும் பிரகாஷ்ராஜும் இணையும் சீன்கள் ரசிக்க வைத்தது. குடும்பப் பின்னணியில் உருவான இப்படத்தின் பாடல் காட்சிகளும் விஜயின் துள்ளலான நடனமும் சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் படம் கலவையான  விமர்சனத்தையே பெற்றது.


இதற்கிடையே  நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.அப்போது தான் கம்மிட்டான படங்களில் மட்டுமே நடித்து முடித்துவிட்டு முழு நீள அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் இந்த அறிவிப்புக்கு பின்னர் விஜய் நடிக்கும் இறுதி படங்களுக்கு ரசிகர்கள்,விஜயின் ஆதரவாளர்கள் என அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான கோட் படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 


கடைசிப் படத்தில் கலக்குவார்களா?




இந்த நிலையில் விஜய் நடிக்கும் இறுதி படமான பெயர் வைக்கப்படாத விஜய் 69 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனெனில் இதுவே விஜய் நடிக்கும் இறுதி படம். அதுவும் தமிழ் சினிமா பயணத்திற்கே முழுக்கு போட இருக்கிறார் விஜய். இதனால் இப்படத்தின்  அப்டேடுக்காக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது.


எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடாத படம் குறித்த அப்டேட்டை இப்படத்தின் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்  அடுத்தடுத்த  வெளியிட்டு வருகிறது. அதன்படி விஜய் 69 ஆவது படத்தில் பிரபல நடிகர் பாபி தியோல் வில்லனாகவும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இணைந்துள்ளார்.  இவர்களுடன் நடிகை மமீதா பைஜூ, இயக்குனர் கௌதமேனன், நடிகை பிரியாமணி, நடிகர் நரேன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


இப்படத்தின் குழுவுடன் தற்போது பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதனால் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜின் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  


இந்த நிலையில் விஜய் 69 படத்தின் பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது தளபதி 69 படத்தில்,விஜய் உடன் மீண்டும் பயணத்தை தொடங்குவது மிகவும் அற்புதமான உள்ளது. என்மீது அன்பைப் பொழியும் மக்களுக்கு நன்றி என நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி உள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்