"பார்த்தி"ன்னு பேரு வச்சா.. பார்த்திபனாவே மாத்திருவீங்களா.. பார்த்திபனே வந்து ஆச்சரியப்பட்டுட்டாரே!

Oct 26, 2023,10:23 AM IST

சென்னை: லியோ படத்தில் விஜய்யின் கேரக்டரின் பெயர் பார்த்திபன். இதை வைத்து ஒரு குசும்புக்காரர், விஜய்யின் லியோ முகத்தில் நடிகர் பார்த்திபனின் முகத்தை ஒட்டி கலகலப்பாக்கியுள்ளார்.


லியோ படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு என வெளியான எல்லா மொழிகளிலும் படம் ஹிட்டாகி விட்டது. இந்த படத்தில் பார்த்திபன் , லியோ என்று இரு வேறு பெயர்களில் விஜய் நடித்துள்ளார். அதாவது ஒரே கேரக்டர்தான்.. ஆனால் இரு பெயர்களில் படத்தில் வருவார் விஜய்.




இதில் ஒரு பெயர் பார்த்திபன்.. இன்னொரு பெயர் லியோ. இந்த பார்த்திபன் என்ற பெயர் நம்ம மக்களுக்கு ஏற்கனவே ரொம்பப் பரிச்சயமானதுதான்.. பார்த்திபன் கனவு முதல்.. "புதுமைப்பித்தன்" நடிகர் - இயக்குநர் பார்த்திபன் வரை பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.


இந்த பின்னணியில் ஒரு குசும்புக்காரர், லியோ  விஜய் முகத்தில் நடிகர் பார்த்திபன் முகத்தைப் பொறுத்தி கலகலப்பாக்கியுள்ளார். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்தப் படத்தை நடிகர் பார்த்திபனே பார்த்து வியந்து ஆச்சரியப்பட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார்.


கூடவே, Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு என்றும் வியந்துள்ளார். இது ஏஐ காலம்.. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. பார்த்திபனை விஜய் ஆக்கலாம்.. விஜய்யை பார்த்திபன் ஆக்கலாம். இருவரையும் எம்ஜிஆர் சிவாஜி ஆக்கலாம்.. கமல் ரஜினி ஆக்கலாம்.. "லாம்"தான்.. படம் ஒரிஜினல் எப்பவும் ஒரிஜினல்தான்.. ! 

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்