அப்பா முரளி, அண்ணன் அதர்வா வழியில்.. ஆகாஷ் முரளி.. அதிரடி சினிமா என்ட்ரி!

Feb 10, 2024,04:57 PM IST

சென்னை: மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வா முரளியின் தம்பிமான ஆகாஷ் முரளி, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில்  அறிமுகமாகிறார்.


நடிகர் முரளி கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் நடித்த புது வசந்தம், இதயம் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் பெற்றது. இப்படங்களின் மூலம் முரளியின் கேரியர் உயர்ந்தது.


இவர் கடல் பூக்கள் என்ற படத்தில் நடித்தது மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்றவர். இவர் விஜயகாந்த், பார்த்திபன், சத்யராஜ், சரத்குமார், மம்முட்டி, பிரபு, வடிவேலு போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம், சமுத்திரம், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, கனவே கலையாதே போன்ற படங்களில் சென்டிமென்ட் காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகரானார் முரளி.




எப்போதும் ஒரே தோற்றத்தில், நடித்த முரளி தன் நடிப்பின் ஸ்டைலை மாற்றி சுந்தரா ட்ராவல்ஸ் என்ற படத்தில் வடிவேல் உடன் இணைந்து முழுக்க முழுக்க காமெடி ரோலில் நடித்து அசத்தியவர். 2010 செப்டம்பர் 8 ந் தேதி தனது 46 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.


இந்த நிலையில் இயக்குநர் விஷ்ணுவர்தன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் புதிய படம் இயக்கப் போகிறார் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இவர் இயக்கும் படங்கள் எப்போதுமே தனித்துவமாகவும், ஸ்டைல் ஆகவும் இருக்கும். படத்தின் தரத்தை உயர்த்துவதில் மிகவும் புகழ் பெற்றவர். 


அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, பில்லா 2 மற்றும் ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். பாலிவுட்டில் இவர் இயக்கிய ஷெர்ஷா திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இதன் மூலம் பாலிவுட்டிலும் சிறந்த இயக்குனராக கால் பதித்தவர். இதனைத் தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் மற்றொரு படத்தை இயக்கினார். இது அவருடைய சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல் என்றே சொல்லலாம்.


தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் மனதைக் கவரும் ரொமான்டிக் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கிய திரைப்படங்களில் நடித்த ஹீரோக்களின் வசீகரத்தை உயர்த்துவதில் மிகவும் பெயர் பெற்றவர். விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆகாஷ் முரளி நடிக்கிறார். இவர் நடிகர் முரளியின் மகன் மற்றும் அதர்வாவின் இளைய சகோதரர் ஆவார். இப்படத்தை எஸ்பி ஃபிலிம்ஃபேர் கிரியேஷன்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோவுடன் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ள, இந்த படத்திற்கு முத்துராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.


இப்படத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், சரத்குமார், குஷ்பூ சுந்தர், பிரபு கணேஷ், கல்கி கோச்லின்,  ஜார்ஜ் கோரா, ஷிவ் பண்டிட்,மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மிகப் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இது தவிர இந்தியாவில் பெங்களூர் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது இப்படம் அழகான காதல் கதையாக உருவாகி உள்ளதாம்.




இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது  மீண்டும் அதே கூட்டணியில் இணைந்துள்ளனர்.


அப்புறம் இது ஒரு குடும்பப் படம் பாஸ்.. எப்படி தெரியுமா.. தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோதான், ஆகாஷ் முரளியின் மனைவி. சேவியர் பிரிட்டோதான் மாமனார்.. அப்ப இது குடும்பப் படம்தானே.. பட், குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இதை உருவாக்கப் போகிறாராம் விஷ்ணுவர்தன்.


பெஸ்ட் ஆப் லக் ஆகாஷ் முரளி!

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்