சப்பையா ஒருத்தன் என்னைய ஏமாத்திட்டுப் போய்ட்டான்.. வெறுத்துப் போன மிர்ச்சி செந்தில்!

Feb 24, 2025,06:13 PM IST

சென்னை: சீரியல் நடிகர் மிர்ச்சி செந்திலிடம் ஒரு பிராடு நபர், போலியான வாட்ஸ் ஆப் செய்தி மூலம் ரூ. 15,000 பணத்தை ஆட்டையைப் போட்டுள்ளார். 


இது டிஜிட்டல் யுகம். எனவே மோசடிகளும் கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. விதம் விதமாக தினுசு தினுசாக ஏமாற்றுகிறார்கள். இதில் படிக்காதவர்கள்தான் என்று இல்லாமல் படித்தவர்களும், விவரமானவர்களும் கூடத்தான் நிறைய ஏமாந்து போகிறார்கள். இப்படி நூதனமாக ஏமாந்தவர்கள் லிஸ்ட்டில் நடிகர் செந்திலும் லேட்டஸ்டாக இணைந்துள்ளார்.


விஜய் டிவி  மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான மிர்ச்சி செந்தில் மேலும் சில சீரியல்களிலும் நடித்து ஃபேமஸானர். பெரிய திரையிலும் தவமாய் தவமிருந்து, வெண்ணிலா வீடு என்று சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.




இவருக்கு  கோயமுத்தூரைச் சேர்ந்த நண்பரான ஒரு ஓட்டல் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் வந்து இருக்கிறது. அதில்  தனக்கு 15,000 பணம் அனுப்ப முடியுமா அந்த மெசேஜில் கேட்கப்பட்டுள்ளது. மிகவும் நெருங்கிய நண்பராச்சே என்று நினைத்த செந்தில், கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அவரிடம் ஜி பே நம்பர் வாங்கி பணத்தை அனுப்பியிருக்கிறார்.


பணம் போன பிறகுதான் பெயர் தேவேந்தர் என்று வந்துள்ளது. இதையடுத்து ஷாக்கான அவர் அய்யயோ இது ஸ்கேம் போலத் தெரிகிறதே என்று பயந்து, சம்பந்தப்பட்ட கோவைக்காரருக்கு போன் செய்து கிராஸ் செக் செய்திருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது, தான் 15,000 ஏமாந்திருக்கிறோம் என்று.


ஆன்லைன் ஸ்கேமில் இப்படி புதுசாக பணம் ஏமாற்ற ஏமாற்றுகிறார்கள். மக்களே கவனமா இருங்க என்று கூறி தான் ஏமாந்த கதையை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து... இனி மக்கள் யாரும் இப்படி ஏமாறாதீர்கள், உஷாராக இருங்கள் என்று கூறியுள்ளார் மிர்ச்சி செந்தில்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்