"நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தர்றேன்".. பிரஸ் மீட் வைத்து அதிர வைத்த மன்சூர் அலிகான்!

Nov 21, 2023,05:06 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: நடிகர் சங்கத்துக்கு நான் 4 மணி நேரம் டைம் தர்றேன்.. அதற்குள் என்னைப் பற்றி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.


நடிகை திரிஷாவுடன், லியோ படத்தில் நடித்தது தொடர்பாக அளித்த ஒரு பேட்டியின்போது மன்சூர் அலிகான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. திரிஷா பற்றி மட்டுமல்லாமல், குஷ்பு, ரோஜா குறித்தும் அவர் பேசியிருந்தார். அவர் பேசியது என்னவோ சினிமா சம்பந்தமானதுதான் என்றாலும் கூட அவரது பேச்சு "மோசமான டேஸ்ட்"டில் இருந்ததால் கடும் கண்டனங்கள் எழுந்தன.


அவருக்கு நடிகை திரிஷா, குஷ்பு, ரோஜா, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி  அவர்களுக்கு விளக்கம் அளித்தார் மன்சூர் அலிகான்.




அப்போது மன்சூர் அலிகான் கூறியதாவது:


என்னை மிகப் பெரிய ஹீரோ ஆக்கியதற்கு அனைவருக்கும் நன்றி. ஐயா,  தமிழ்நாடு வேலை வாய்ப்பை இழந்துட்டு ஆபத்துல இருக்கிறது. இதே இடத்தில் இருந்து பத்து நாட்களுக்கு முன்பு சொன்னேன்.  இந்தியா முழுவதும் காஸ்ட் சர்வே நடத்த வேண்டும் . பீகாரில் செய்து விட்டனர். தமிழ்நாட்டில் உடனடியாக செய்ய வேண்டும். 300 கோடி பணமும், மூவாயிரம் நபர்கள் இருந்தா போதும். இட ஒதுக்கீடு கேட்டு யாரையும் தொங்க வேண்டியது இல்லை. இதனை ஒன்னரை மாதத்தில் எடுத்திடலாம். 


இட ஒதுக்கீடு கேட்டு யாரிடமும்  தொங்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளை நல்லா படிங்க வைங்க. கணக்கீடு எடுத்துவிட்டால் கேஸ்ட் சென்சஸ் இருந்தால் கிளீன் இந்தியா ஆகிவிடும். அந்தந்த இடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்து அனுப்பிடலாம். அப்போது அனைவருக்கும் அவர்களின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் வேலை கிடைக்கும். 


இதற்காகத்தான் போராடினேன், அதை மறைத்து விட்டு வீடியோவை கட் பண்ணி வெளியிடறாங்க. வைரமுத்து ஆதங்கப்பட்டு ஹீரோயினுக்கு ஏன்  முக்கியத்துவம் கொடுக்க மாட்றாங்க என கேட்டார். எனக்கே வேலை இல்லை. நடிகர் சங்கம் முறையாக "சார் இப்படி வீடியோ வந்து இருக்கு" என என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் இல்லை. நோட்டீஸ் அனுப்பி இது என்ன என்று விசாரிக்கவும் இல்லை. 


நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி இந்த வீடியோவை பார்த்த உடனேயே அவரை தூக்குல போடுங்கன்னு சொல்லுவாங்களா. இது தான் நடைமுறையா .. ஒரு நடிகர் சங்கம் இப்படித்தான் நடத்துவாங்களா. .. இப்படித்தான் பண்ணுவீர்களா? நான் நாலு மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு டைம் கொடுக்கிறேன்.  பிரஸ் மீட்ல அனைவரும் முன்பாக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். நான் மன்னிப்பு கேட்கும் ஜாதியா.. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறு செய்துள்ளது.


வேண்டாம் நான் அமைதியாக இருக்கிறேன். எரிமலையாய் வெடித்தேன் என்றால் அனைவரையும் துண்ட காணோம் துணியும் காணோம் என்று ஓட விடுவேன். என்னை கருப்பு ஆடா ஆக்கிவிட்டு நீங்க எல்லோரும் நல்ல பேர் எடுக்கிறீர்களா. இது என்ன நியாயம் . youtube சேனல் நடத்துறவங்க  மேல தப்பு இல்ல. அவங்க காசுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவாங்க. மக்களுக்கு நான் யார் என்று தெரியும்.


நீட் தேர்வில் அனிதா என்ற பெண் இறந்ததற்கு மகளிர் ஆணையம் ஏன் அனிதாவிற்கு நியாயம் பெற செய்யவில்லை. அதேபோல் மணிப்பூரில் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஏன் அங்க போய் நிற்கவில்லை. இதெல்லாம் எனக்கு தேவையில்லை. நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. நடிகர் சங்கம் 4 மணி நேரத்தில் மீடியாவுக்கு கொடுத்த செய்தியை வாபஸ் பெற வேண்டும். 21 நாட்களுக்குள் துறை ரீதியாகவும், நடிப்பு ரீதியாகவும் மன்சூர் அலிகானுக்கு கடிதம் அளிக்க வேண்டும். கடிதம் அளிக்கவில்லை என்றாலும் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்றார் மன்சூர் அலிகான்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்