விசாரணைக்கு ஆஜராகிறேன்.. முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்று விட்டேன்.. மன்சூர் அலிகான் திடீர் அறிவிப்பு

Nov 23, 2023,01:52 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: நடிகர் மன்சூர் அலி அலிகானுக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலையில் இருப்பதாக கூறி  ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடிதம் அளித்த நிலையில் தற்போது விசாரணைக்கு வரப் போவதாக தெரிவித்துள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிஷா குறித்த சர்ச்சையில் சிக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இதனை அவரது மனைவி பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் கைதாவதிலிருந்து தவிர்க்கும் பொருட்டு அவர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  இந்த மனு இரண்டு நாட்களுக்கு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று மன்சூர் அலிகான் விசாரணைக்கு வரவில்லை.




அவருக்கு தொண்டையில் தொற்று ஏற்பட்டு அவரால் பேச முடியாத காரணத்தால் அவர் ஆஜராக முடியாது என காவல் நிலையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளார்.


இந்த கடிதத்தில்  அவர் குறிப்பிட்டுள்ளதாவது,


மேன்மைமிகு அம்மையீர், திரைப்பட நடிகை திரிஷா அவர்களை எனது அரசியல் பேட்டியின் இடையே நான் குறிப்பிட, அது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்க, இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் வழக்குப் பதிவு செய்து கு.மு .ச. 41 ஏ பிரிவின்படி விசாரிக்க என்னை அழைத்தீர்கள்.


அம்மா எனது குரல்வளை 15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து (தொண்டையில் இன்பெக்சன்) பேச மிகச் சிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை தங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.  உண்மையுள்ள  மன்சூர் அலிகான்.. என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் மன்சூர் அலிகான்.


திடீர் பல்டி


இப்படி கடிதம் அனுப்பிய நிலையில் திடீர் பல்டியாக, இன்று பிற்பகல் 2. 30 மணிக்கு விசாரணைக்குப் போகப் போவதாக அவரது பிஆர்ஓ மூலம் தகவல் தெரிவித்துள்ளார் மன்சூர் அலிகான்.  அதில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை  வாபஸ் பெற்று விட்டேன். எனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்காக ஆஜராகவுள்ளேன் என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.


முன்னதாக மன்சூர் அலிகான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறாக குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்த நீதிபதி அல்லி  மன்சூர் அலிகான் தரப்பைக்  கண்டித்தார். இது என்ன பிளே கிரவுண்டா.. டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது.. என்று அவர் கண்டித்ததைத் தொடர்ந்து மனுவைத் திரும்பப் பெற்றது மன்சூர் அலிகான்  தரப்பு.

சமீபத்திய செய்திகள்

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்