- சங்கமித்திரை
சென்னை: நடிகைகள் குஷ்பு, திரிஷா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகை திரிஷா குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில் மன்சூர் அலிகானுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் தலையிட்டு அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணை முடிந்த நிலையில் திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான். திரிஷாவும் தவறு செய்வது மனித குணம்.. மன்னிப்பது கடவுள் குணம் என்று டிவீட் போட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது என்று எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது மறுபடியும் இந்த பிரச்சினையை முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் மன்சூர் அலிகான்.
அதாவது குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது வழக்குத் தொடரப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது பிஆர்ஓ கோவிந்தராஜு மூலமாக அவர் விடுத்துள்ள செய்தி:
குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும்
சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!
11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவை தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது!
உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! ---நடிகர் மன்சூர் அலிகான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இப்போது என்ன மாதிரியான பஞ்சாயத்து வெடிக்கப் போகிறது என்று தெரியவில்லை.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}