மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?.. விஷம் கலந்த ஜூஸைக் கொடுத்ததாக குமுறல்.. பரபர தகவல்!

Apr 18, 2024,10:37 AM IST

வேலூர்: பிரச்சாரத்தின் போது  மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு விஷம் கலந்த பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார். 


நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இந்தத் தொகுதியில் விதவிதமா.. வித்தியாசமா.. என்ற தொலைக்காட்சி விளம்பரம் போல் கறி வெட்டுவது என்ன.. காய்கறி விற்பது என்ன.. ரிக்ஷா இழுப்பதென்ன.. பலாப்பழத்தைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்வது என்ன..  இப்படி பல  நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 


இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. நெஞ்சில் வலிப்பது போல இருக்கவே, வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு ட்ரீட்மென்ட் கொடுத்தும் அவருக்கு வலி நிற்காத காரணத்தால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு கே எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில்  இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். அதில் அவர் கூறியதாவது:




நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி பழ ஜூஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு மோர் கொடுத்தாங்க. குடிச்ச உடனேயே வண்டியில் இருந்து விழும் நிலையில் இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்தும் வலி நிற்கவில்லை.


வலி அதிகமான காரணத்தால் சென்னை கே எம் நர்சிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கூட்டிட்டு வந்து ஐ சி.யூ  ல அட்மிட் பண்ணாங்க . இப்ப கொஞ்சம் வலி கம்மியா இருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி  போக டிரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என கூறப்படுகிறது என தகவல் கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்