எப்படி இருந்த மாதவன் இப்படி ஆயிட்டாரே.. செம ஸ்லிம்.. அவரோட எடைக் குறைப்பின் ரகசியம் இதுதானாம்

Jul 19, 2024,05:33 PM IST

சென்னை:   நடிகர் மாதவன் இடையில் சற்று சதை போட்டு புசுபுசுவன்று காணப்பட்டார் இல்லையா.. இப்போது நன்றாக உடல் மெலிந்து ஸ்லிம் ஆகியுள்ளார். பழைய மேடி போலவே மாறியும் உள்ளார்.


பலரும் இதைப்பார்த்து அடடே எப்படி இருந்த மேடி இப்படி ஆயிட்டாரே என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அதற்கான டிப்ஸையும் மாதவனே கொடுத்துள்ளார்.


அலைபாயுதே படத்தில் பார்த்த மாதவனைத்தான் இன்னும் பலரும் மனதில் வைத்துள்ளனர். அந்த மேடிக்கு நிகராக யாரையும் பார்க்க அவர்கள் தயாராகவே இல்லை. அந்த அளவுக்கு மாதவன் மீதான கிரேஸும், பாசமும் இன்னும் பலரிடம் மாறாமல் உள்ளது. சாக்லேட் பாயாக அறிமுகமாகி இடையில் ரக்ட் பாயாகவும் மாறி, அதிரடி ஹீரோவாக அதகளம் செய்து  விதம் விதமாக நடித்து வித்தியாசமான நடிகராக மாறிப் போய் விட்டார் மாதவன்.




இடையில் அவர் சதை போட்டாற் போல மாறியிருந்தார். பலரும் என்னாச்சு மேடிக்கு, இப்படி வெயிட் போட்டுட்டாரே.. இது நம்ம மேடியே இல்லை என்று அக்கறையுடன் கேட்க ஆரம்பித்தனர். அது மேடிக்கு கேட்டுச்சோ என்னவோ டக்கென இப்போது வெயிட்டைக் குறைத்து ஸ்லிம் ஆகி விட்டார். இது அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆனால் உடற்பயிற்சியே செய்யாமல் 21 நாட்களில் தனது எடையைக் குறைத்துள்ளாராம் மேடி. அதுதான் ஆச்சரியமாக உள்ளது .. எப்படி இது சாத்தியம் என்று. இதற்கான டிப்ஸையும் இப்போது கொடுத்துள்ளார் மாதவன்.


"ரொம்ப சிம்பிள்ங்க.. Intermittent fasting கடைப்பிடிங்க.. சாப்பிடுவதை நன்றாக மென்று சாப்பிடுங்க.. அதாவது திடமாக வயிற்றுக்குள் எதுவுமே போகக் கூடாது. நன்றாக திரவ நிலைக்கு மாறி வயிற்றுக்குள் தள்ள வேண்டும். அப்போதுதான் ஜீரணம் எளிதாக இருக்கும். இரவுச் சாப்பாட்டை மாலை 6.45 மணிக்கே முடித்து விடுங்க.  மாலை 3 மணிக்கு மேல் வேக வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்க.. வேக வைக்காத எதையும் சாப்பிடாதீங்க. அதிகாலையில் எழுந்து வாக்கிங் போங்க. இரவு சீக்கிரமே தூங்கப் போய்ருங்க. தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாகவே டிவி பார்ப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை நிறுத்திடுங்க. 


தினசரி நிறைய தண்ணீர் குடிங்க. நிறைய பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கங்க. உங்களது உடம்புக்குள் போகும் எதுவாக இருந்தாலும் அது செரிமானம் ஆக வேண்டும். அது முக்கியம். இது உங்களது உடல் நலத்தையும் பாதுகாக்கும், உடம்பின் மெட்டபாலிசத்தையும் சரியாக வைத்திருக்கும்.  பொறித்த உணவுகள், பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை முழுமையாக தவிருங்கள்.. அவ்வளவுதான்"


செஞ்சு தான் பார்க்கலாமே..  நம்ம உடம்பு நமக்கு முக்கியம் இல்லையா..!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்