சென்னை: அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ராக்காயி, கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடலாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் பாலா. இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வயிறு குலுங்க சிரிக்க வைத்ததன் மூலம் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவரை ரசிகர்கள் கலக்கப்போவது யாரு என்ற சுருக்கத்தில் கே பி ஒய் பாலா என செல்ல பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார்.
பாலா சாதாரண வளர்ந்து வரும் சிறிய நடிகர் தான். அவர் வாங்கும் சம்பளமோ மிகவும் குறைவுதான். இருப்பினும் அவ்வப்போது காமெடி நிகழ்ச்சிகள், காமெடி ஷோக்கள், தொகுப்பாளர் என தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதில் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியை சமூக பணிகளுக்காக செலவிடுகிறார். குறிப்பாக மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்த வேளையில் உணவு தண்ணீர் இல்லாத மக்களுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டியவர். இதற்காக தன்னுடைய சேமிப்பில் இருந்து பெரும்பங்கை செலவு செய்த நல்ல உள்ளம் கொண்டவர்.பாலாவின் இந்த உதவியை பலரும் பாராட்டினர். அதேபோல் காது கேட்காத மாணவர்களுக்கு ஒளியும் ஒலியும் ஆக இருப்பது இயரிங் எய்ட் கருவிதான். அப்படிப்பட்ட செவித்திறன் கருவியை 100 மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சிறிய கிராமத்தில் மருத்துவ வசதிக்காக இரண்டு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்தவர்.
இதுதவிர வழக்கமாக பெட்ரோல் போட செல்லும் பாலா, அந்த பகுதியில் தண்ணீர் பாட்டில் விற்கும் சிறுவனின் வறுமையை அறிந்து அச்சிறுவனின் கல்வி செலவையும் ஏற்றுள்ளார். இப்படி பல்வேறு வகையிலும் மக்களை மகிழ்வித்து வருகிறார் பாலா.
சின்ன சின்ன ரோல்களில் நடித்து வரும் பாலா புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஒரு சிங்கிள் பாடல் ஆல்பத்தில் அசத்தியுள்ளார். ராக்காயி என்ற பெயர் கொண்ட அந்தப் பாடலில் அசத்தலாக நடனமாடியுள்ளார் பாலா. மறுபக்கம் நட்சத்திர தம்பதிகளான சேத்தன் மற்றும் தேவதர்ஷினியின் மகள் நியதி பாலாவுக்கு இணையான ஜோடியாக இதில் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இவர் ஏற்கனவே திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள ராக்காயி பாடலை கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் இணைந்து தயாரித்துள்ளனர். மூ.வி பாடல் வரிகளில் ஏ.கே.பிரியன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்பாடலை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான கார்த்திக் நிவாஸ் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் ஸ்பார்க் பாடலை பாடிய வ்ருஷா பாலுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் விசுவல் செட் புரொடக்சன் டெக்னாலஜி எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. 2கே கிட்ஸ்களை கவரும் காதல் பாடலான ராக்காயி பாடலை பிங்க் ரெக்கார்ட் யூடியூப் பக்கத்தில் நேற்று வெளியானது. பாடல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. மேலும் இப்பாடலில் கேபிஒய் பாலா மற்றும் நியதியின் குத்தாட்டத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
1967 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் வெளியான பட்டிக்காடா பட்டணமா படத்தில் உள்ள அடி என்னடி ராக்கம்மா என்ற பாடல் வரியை போன்று கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் ராக்காயி பாடலும் அதே போன்று பழைய கால செட்டப்புடன் என் கண்ணு என் முக்கு என் பல்லு என்ற வரிகளில் தொடங்குகிறது. தொடர்ந்து உன் பேசு உன் நோசு அட செம்ம சார்ப்பு பீசு என அடுக்கு மொழியுடன் வலம் வரும் இந்தப் பாடலில் பாலாவின் குத்தாட்டம் ரசிக்கும்படி உள்ளது. அதேபோல் நியதியின் ஆடை தோற்றமும் முகபாவனையும் இப்பாடலுக்கு பிளஸ் என்றே சொல்லலாம். மொத்தத்தில் பாடல் சூப்பர் சூப்பர் ஹிட்.
அடுத்தடுத்த மேடைகளில் இந்த ஜோடியைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகள்.. விருந்து வைத்த விஜய்.. வாசலில் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
தொடர் உயர்வில் தங்கம்... சவரன் ரூ.58,000த்தை கடந்தது.. திகைப்பில் மக்கள்
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
சனாதன சக்திகளை ஓங்க விட்டு விடாதீர்கள்.. திரைத்துறையினருக்கு திருமாவளவன் கோரிக்கை
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
வங்க கடலில் இன்று உருவாகிறது.. காற்றழுத்த தாழ்வு.. நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!
நவம்பர் 23 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
{{comments.comment}}