பொம்மைக்கு உதவுவேன்.. பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன்.. நடிகர் கிச்சா சுதீப் அதிரடி

Apr 05, 2023,02:41 PM IST
பெங்களூரு:  எனக்கு பாஜக பல உதவிகளைச் செய்துள்ளது. பாஜகவுக்கு இப்போது நான் உதவி செய்யப் போகிறேன். அந்தக் கட்சியில் நான் சேரவில்லை. ஆனால் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் கன்னட நடிகர் கிச்சா சுதீப்.

பிரபல கன்னட நடிகர் சுதீப் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக அறவித்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுதீப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் களம் இறங்கியுள்ளனர்.  அவர் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசினார் சுதீப். அப்போது அவர் கூறுகையில், 
பாஜக எனக்கு பல நேரங்களில் உதவி செய்துள்ளது. எனது கஷ்ட காலத்தில் துணை நின்றுள்ளது. இப்போது அவர்களுக்கு நான் துணை நிற்கப் போகிறேன். நான் பிரச்சாரம் மட்டுமே செய்யப் போகிறேன். கட்சியில் சேரவில்லை. தேர்தலில் போட்டியிடவில்லை.

கட்சி சார்பில்லாமல் முதல்வர் பொம்மைக்கு எனது ஆதரவைத் தெரிவித்துள்ளேன்.  அவர் எனக்கு காட்பாதர். அவர் மீது தனிப்பட்ட மரியாதையும், பாசமும் உண்டு. அதற்காகவே அவரை ஆதரிக்கிறேன். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவர் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அவரை ஆதரிப்பேன் என்றார். பேட்டியின்போது கர்நாடக முதல்வர் பி.எஸ். பொம்மையும் உடன் இருந்தார்.  

முதல்வர் பொம்மை கூறுகையில், கிச்சா சுதீப் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. எனக்காக பாஜகவை ஆதரிக்கிறார் என்றார் முதல்வர் பொம்மை.

கிச்சா சுதீப் திடீரென பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சுதீப்பின் இமேஜ் சரியும் என்றும் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சுதீப் அதைப் பொருட்படுத்தவில்லை. கர்நாடகத்தில் பாஜகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,அங்கு காங்கிரஸே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், கிச்சா சுதீப்பின் பிரச்சாரம் பாஜகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸுக்கே சாதகமாக உள்ளன என்பது முக்கியமானது.

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்