சென்னை: திமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் திமுக கூட்டணி பக்கம் சேர்ந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் தான் வரும் 2024ம் ஆண்டிற்கான லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணிக்கு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாஜக என்னும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க இந்திய கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியா பெரும் முதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்கைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களில் வெற்றி பெறச் செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன கட்சிகளை விரட்ட, அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
- மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை சூட்ட ஒன்றிய அரசு பரிந்துரைக்க வேண்டும்.
- பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை அக்டோபர் 30 அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசு ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமூகத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
- ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}