நீங்களால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை.. லவ் யூ சோ மச் அப்பா.. ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி

Nov 07, 2024,06:28 PM IST

சென்னை: நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து நான் எப்போதுமே நெகிழ்ந்து இருக்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இதனைத் தொடர்ந்து தெலுங்கு,  ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். 




நடிகர் கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியின் மகள் ஆவார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பு, இயக்குனர் டான்சர் சண்டை பயிற்சியாளர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக கொண்ட கலைஞர். இப்படி பல்வேறு திறமைகள் கொண்ட கமலஹாசனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார் மகள் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் வாரிசு என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஸ்ருதிஹாசன் நடிகையாக பாடகராக, தந்தை நடித்த உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளராக பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்கிறார். 


இது மட்டுமல்லாமல் இவர் நல்ல பேச்சுத் திறமை மற்றும்  அமைப்பாளராகவும் செயல்படுகிறார். சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசனின் வரிகளில் ஸ்ருதிஹாசனின் இசையமைப்பில் இனிமேல் ஆல்பம் ரிலீஸ் ஆனது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  நடித்திருந்தனர். காதல் முதல் திருமணம் வரையிலான பந்தத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் படு ரொமான்ஸ் மூடில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் தனது தந்தையின் 70 வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த வாழ்த்துக் குறிப்பில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் மிகவும் அரிய மனிதர். உங்களுடன் இணைந்து நடப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எப்போதும் நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அத்தனை மாயாஜாலங்களையும் கண்டு நான் எப்போதும் நெகழ்ந்திருக்கிறேன் உங்களுக்கு இன்னும் பல பிறந்தநாள் வரவேண்டும். உங்களுடைய கனவுகள் அனைத்தும் பலிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்