புதுச்சேரி: நற்பணி செய்தவர்கள் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இந்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வேட்பாளர் என அனைவரும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சேர்ந்துள்ளது. இருப்பினும் இத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மநீம தலைவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இன்று புதுச்சேரி வந்த மநீம கட்சி தலைவர் கமலஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நானும் மக்களில் ஒருவன் என்பதனால் என் மனநிலை தான் அவர்களுக்கும் இருக்கும் என்று எதிர்பார்கிறேன். மாற்றம் என்பது இப்போது முக்கியம் இல்லை.நம்முடைய குடியுரிமை, கன்ஸ்டிடியூசனை முதற்கொண்டு அனைத்தையும் தற்காத்துக் கொள்ளும் நேரம் இது. அதனால், கட்சி என்கிற வரையறை கோட்டையெல்லாம் கடந்து வந்திருக்கின்றேன். தமிழன் என்பதும் இந்தியன் என்பது தான் இன்று பிரதானமானதாக இருக்கிறது.
நீதி தான் நமக்கு நாதி என்றாகி விட்டது. ஜனநாயகத்தில் அப்படி இருக்கக் கூடாது. ஜனநாயகமாகவே இது நீடிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் முதற்கட்டமாக இப்பொழுது இந்த தேர்தலை நான் பார்கிறேன்.இது எல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். நான் அறிவுரை செல்ல வேண்டியது இல்லை. செய்ய வேண்டியது என்னவென்று நான் சுருக்கமாகவே சொல்லி விட்டேன். அதில் இருந்து புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.நற்பணி செய்தவர்கள் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}