இயக்குநராக அவதாரம் எடுக்கக் காத்திருக்கும் ஜெயம் ரவி.. யோகி பாபுவுக்கு கதை கூட ரெடியாம்!

Feb 14, 2024,06:06 PM IST

சென்னை: 3 கதைகளை எழுதி வைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது அதை இயக்குவேன். அதில் ஒரு கதை யோகி பாபுவுக்கு எழுதியது என்று கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.


ஜெயம் ரவியின் குடும்பத்தில் ஏகப்பட்ட சினிமாக்காரர்கள் உள்ளனர். அவரது தந்தை மோகன் சிறந்த எடிட்டராக வலம் வந்தவர். அண்ணன் ராஜா, சிறந்த இயக்குநராக வலம் வருபவர். அட்டகாசமான சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஜெயம் ரவியோ, சிறந்த நடிகராக  வலம் வருபவர். அவரது மாமியார் சுஜாதா விஜயக்குமார், திரைப்படத் தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.


இந்தநிலையில் ஜெயம் ரவிக்குள்ளும் இயக்குநராகும் கனவு துளிர்க்க ஆரம்பித்துள்ளது. இதை அவர் சொல்லியுள்ளார்.




ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சைரன். இந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளி வர உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கைதையில் உருவாகி இருக்கிற இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். 


இந்த படத்தின் டீசர்  மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிப்ரவரி 16ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வந்துள்ளது.ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தில் போலீசாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். அவர் கேரக்டர் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் கைதி என இருவேறு கெட்டப்புகளில் ஜெயம் ரவி வருகிறார்.


படம் குறித்து ஜெயம் ரவி  கூறுகையில்,  நானும் இயக்குநராகும் கனவில் இருக்கிறேன். 3 கதை கூட ரெடியாக இருக்கிறது. நேரம் அமைய வேண்டும். அப்போது இயக்குநர் ஆவேன். யோகி பாபுவுக்கு ஒரு சூப்பரான கதை ரெடியாக இருக்கிறது. பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ஜெயம் ரவி.


ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில், தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். பிரதமர் படமும் வெயிட்டிங்கில் உள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா.. மோகன்ராஜா இயக்கத்தில் பரத நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிக்கவும் ரெடியாகி வருகிறாராம் ஜெயம் ரவி. முழுமையாக பயிற்சி எடுத்த பின்னர் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறார்களாம்.


பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் இதற்கு முன்பு கமல்ஹாசன் (சலங்கை ஒலி), அஜீத் (காட்பாதர்) ஆகியோர் நடித்துள்ளனர். அந்த வரையில் ரவியும் சேரவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

அதிகம் பார்க்கும் செய்திகள்