இந்தியன் 2 படத்தில்.. விவேக்குக்கு உயிர் கொடுத்து நடித்தவர்.. நம்ம மைனர் குஞ்சுமணியாமே.. சூப்பர்ல!

Jul 14, 2024,01:18 PM IST

சென்னை: இந்தியன்2 படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விவேக் நடித்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த வேடத்தில் ஒரிஜினலாக நடித்தவர் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.


அவர் வேறு யாருமல்ல.. விவேக்குடன் இணைந்து மைனர் குஞ்சு என்ற காமெடி வேடத்தில் கலக்கியவரான நடிகர் பாபுதான். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடிக்க உருவாகி வெளியாகியுள்ள படம் இந்தியன். 2 முதல் பாகம் போல விறுவிறுப்பாக இல்லை என்று பல் வேறு விதமான நெகட்டிவ் விமர்சனங்களை முதல் நாளே சிலர் திட்டமிட்டு பரப்பிய போதிலும் கூட மக்கள் தியேட்டர்களுக்குப் படையெடுத்து ரசித்து வருகின்றனர்.




படம் குறித்துத் திரையுலக பிரபலங்களும் வெகுவாக பாராட்டி கமெண்ட் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.  திரை ரசிகர்களும் கூட படம் நல்லாத்தானே இருக்கு.. எதுக்காக இப்படி நெகட்டிவாக பரப்புகிறார்கள் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.


அதில் ஒன்று இப்படத்தில் தோன்றிய நடிகர் விவேக். இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர்தான் விவேக் மரணமடைந்தார். இதனால் அவரது ரோல் படத்தில் இருக்காது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் மூலம் விவேக் உருவத்துக்கு உயிர் கொடுத்து படத்தில் கொண்டு வந்து விட்டார் ஷங்கர். அதேபோல மனோபாலாவும் இதில் இருக்கிறார்.


இதில் விவேக் வேடம் தத்ரூபமாக பொருந்திப் போயிருக்கிறது. பலரும் விவேக்கை மீண்டும் திரையில் பார்த்ததால் பெரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். இந்த நிலையில் விவேக் வேடத்தில் நடித்தவர் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. பல்வேறு சீரியல்கள், மற்றும் சினிமாவில் நடித்தவரான நடிகர் பாபுதான் விவேக் ரோலில் நடித்தவராம். இதை அவரே வெளியிட்டுள்ளார்.




இதுகுறித்து அவர் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இதைச் சொல்லலாமா என்று தெரியவில்லை. விவேக் சார் வேடத்தை நான்தான் செய்தேன். அவரது இடத்தை நிரப்புவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. விவேக் சார் வேடத்தில் நடித்த அனுபவம் பெரியது. ஒவ்வொரு முறையும் விவேக்காக உணர்ந்து நான் நடித்தேன். 


இயக்குநர் ஷங்கர் சார் ஒவ்வொரு சீனிலும் சொல்லிக் கொடுத்தார். வழக்கமான விவேக் சார் சாயல் இல்லாமல் இதில் வேறு மாதிரியான ஸ்டைல் பாலோ பண்ணிருக்காங்க. நான் நடிக்கும்போது அதிலிருந்து மாறினால் கூட ஷங்கர் சார் சொல்லிக் கொடுத்துத் திருத்துவார். இது எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று கூறி நெகிழ்ந்துள்ளார் பாபு.


பாபுவும், விவேக்கும் இணைந்து பல படங்களில் காமெடி செய்துள்ளனர். ஒரு படத்தில் இன்டர்வியூவுக்குப் போகும் போது விவேக் சாக்கடையில் விழுந்து விடுவார். அந்தக் காட்சியில் பாபுவும், அவரும் சூப்பராக காமெடி செய்திருப்பார்கள். அதேபோல மைனர் குஞ்சுமணியாக ஒரு படத்தில் பாபு வருவார். அவரை வைத்து விவேக் செய்யும் காமெடிக் காட்சிகள் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. இப்போது விவேக் வேடத்தில் பாபு நடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்