Vijayakanth: மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. என்னோட மூத்த அண்ணன்.. ஆனந்தராஜ் வேதனை

Dec 28, 2023,10:36 AM IST

சென்னை: வெறுமனே இரங்கல் என்று இதை சொல்லி விட முடியாது. எனது அண்ணனே இறந்து விட்டது போல வேதனைப்படுகிறேன்.. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து  ஆனந்தராஜ் கூறியதாவது:


மிகவும் மனதிற்கு கவலையாக இருக்கு. அவர் இறந்ததற்கு நிறைய காரணம் சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவரு நம்ம கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். 




நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். நல்ல மனிதர் பல ஆண்டுகள் அவர் கூட நான் பழகிட்டு வரேன். நட்புக்கு நல்ல மரியாதை கொடுக்க கூடிய அவர், ஒரு அண்ணன் மாதிரி குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்வாரு நானும் நல்ல முறையில் தான் பழகி வந்தேன்.


30 ஆண்டு காலமாக அவரோட நான் பயணிச்சிருக்கேன். அவர் தனி ஒரு பாலிசி வச்சிருப்பாரு, நட்புரீதியில் அவர் கூட இருந்ததுனால சொல்றேன் அவரு ரெண்டு பிள்ளைங்களுக்கு திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி இறந்திருந்தா கூட பரவால்ல. இன்னும் கொஞ்சம் கால அவரும் நம்ம கூட இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். 


இது ஏற்றுக்கொள்ள முடியாதது.  நடிகர் சங்கத்தில் அவர் தலைவரா இருக்கும்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பணியையும்  செஞ்சுருக்கோம்.  நட்பு ரீதியா ஒரு சங்கத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு. அவரு செஞ்சது எல்லாம் என் கண் முன்னாடியே இருக்கு. ரொம்ப அன்பானவரு.  எனக்கு ரொம்ப பிடிக்கும். 


அவரு எல்லாருக்கும் கொடுக்குற மரியாதை ரொம்ப பிடித்த விஷயம். உண்மையில் அவரு சாகல அவரு நம்ம கூட தான் இருக்காரு. அவர் இறந்துட்டாருன்றது என்னால ஏத்துக்கவே முடியல. அவர் நீண்ட காலம் இருக்கணும்னு தான் என்னோட ஆசை. கலைஞராகவும் நடிகராகவும் அவர் நீண்ட காலம் இருந்திருக்கணும் என்றார் ஆனந்தராஜ்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்