அஜித்குமார் வாங்கிய புதிய Ferrari கார்.. விலை எவ்வளவு தெரியுமா?.. வரி வேற இருக்கே.. அம்மாடியோவ்!

Jul 24, 2024,06:37 PM IST

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் புதிய ஃபெராரி காரை வாங்கியுள்ளார். அந்த காருடன் நடிகர் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


அஜித் கடந்த 2 வருடங்களாக நடித்து வரும்  படம் தான் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர்  நடித்து வருகின்றனர். பல மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.


படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ் தேதி முடிவு செய்வதற்கு முன்னதாக இப்போதே படத்தின் வியாபாரத்தை துவக்கி விட்டது படக்குழு. டிவி வெளியீட்டு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த இரு நிறுவனங்களும் ரூ.250 கோடிக்கு விடாமுயற்சி படத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.225 கோடி தான். இந்த படத்திற்கு அஜித்திற்கு சம்பளமாக மட்டும் ரூ.160 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.




இந்நிலையில்,  படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், துபாய் சென்ற அஜித் ரூ.9 கோடிக்கு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்ஸில்  அதிக விருப்பம் கொண்டவர் அஜித்குமார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் மற்றும் கார் ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். கார் மற்றும் பைக் ரேசின் போது பல விபத்துகளில் சிக்கிய அஜித்குமார், பல சர்ஜரிகளை செய்திருந்தும், அவருக்கு கார் மற்றும் பைக் மீது  குறையாத காதலுடன் உள்ளார். 


அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது ஃபெராரியையும் வாங்கி இணைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்