90ஸ் கிட்ஸ்களின் சாக்லேட் பாய் அப்பாஸ்.. பெரிய கேப்புக்குப் பின்.. நடிப்புக் குளத்தில் குதிக்கிறார்!

Feb 07, 2025,03:28 PM IST

சென்னை: 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நடிகர் அப்பாஸ் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 90ஸ் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


தமிழ் சினிமாவில் காதல் தேசம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் அப்பாஸ். இவரின் முதல் படமே இவருக்கு வெற்றி வகையை சூடிக்கொடுத்தது. அதிலும் இவருடைய அறிமுகமே வெள்ளை நிறத்துடன் அழகான தோற்றத்துடன் இருந்தால் நடிகர் அப்பாஸ் பெண்கள் மனதில் கனவு கண்ணனாகவும் வலம் வந்தார்.


இப்படம் 90 கிட்ஸ் கால இளைஞர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனென்றால் கல்லூரி மாணவர்களின் காதல் பருவம், நண்பர்களிடையே ஏற்படும் சிறு சிறு மனஸ்தாபங்கள், ஒற்றுமை என படத்தின் கதைக்களம் அழுத்தம் திருத்தமாக அமைந்திருந்ததால் ரசிகர்கள் மனதை வென்றது. இது மட்டுமா இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இன்று வரையிலும் கல்லூரி இளைஞர்கள் மற்றும் காதலர்கள் முணுமுணுக்கும் பாடல் வரிசைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.




இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பிரியா ஓ பிரியா, ஜாலி, ஆசைத்தம்பி என பல்வேறு படங்களில் நடித்துள்ளார் அப்பாஸ். தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காதல் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் கூட காதலை மையமாகக் கொண்டு அப்பாஸ் மற்றும் மாதவன் கூட்டணியில் உருவான மின்னலே திரைபடம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இதில் உள்ள பாடல்களும் இசையும் இன்றுவரை காலத்தால் அழியாத பாடல்களாகவும் இளைஞர்களை ஈர்த்துள்ளது.


இதேபோல் சக முண்ணனி நடிகர்களுடன் இணைந்து குடும்பங்கள் கொண்டாடும் படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் அப்பாஸ்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி,என பல்வேறு மொழிகளில் 40 படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம் படத்திலும் கலக்கியிருப்பார்.


இதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டில் பெட்ரோல் பங்கில் வேலை செய்வதாகவும் அவ்வப்போது செய்திகள்  வெளியாகின. இதனால் ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வந்தனர். 


இந்த நிலையில்  தற்போது நடிகர்கள் ஷாம், பிரசாந்த் போன்ற நடிகர்கள் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றனர். இவருடைய படங்களை மக்கள் மீண்டும் பார்க்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா துறைக்கு கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் அப்பாஸ். அதாவது நடிகர் அப்பாஸ் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அப்பாஸ் தற்போது வெப் சீரியஸில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தொடர்ந்து படத்திலும் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. 90ஸ் கிட்ஸ் களுக்கு பிடித்த ஹீரோ தற்போது மீண்டும் நடிக்க வருவது ரசிகர்களை குஷியில்  ஆக்கியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்