ஆடிப்பூரம் 2024 : வில்லிபுத்தூரில் ஆண்டாள் கல்யாணம் பார்த்தால்.. வீட்டில் கெட்டி மேளம் கொட்டும்!

Aug 07, 2024,08:45 AM IST

சென்னை : ஆடி மாதத்தில் வரக் கூடிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாத வளர்பிறையில் பூசம் நட்சத்திரம் உச்சமடையும் நாளையும் ஆடிப்பூரமாக நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த திருநாள் என்பதால் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. அன்னை உமா தேவி அவதரித்தது, உலகம் சிருஷ்டிக்கப்பட்டதும் இந்த ஆடிப்பூர தினத்தில் தான் என சொல்லப்படுகிறது.


உலகிற்கே அன்னையாக விளங்கும் பராசக்தி, உலகை தோற்றுவித்த நாள் என்பதால் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, வளைகாப்பு திருவிழா நடத்தும் வழக்கம் உள்ளது. ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் தவத்தை துவங்கும் சிறப்புக்குரிய நாளாகவும் ஆடிப்பூரம் உள்ளது.  இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 07ம் தேதி புதன்கிழமை வருகிறது.  ஆகஸ்ட் 06ம் தேதி மாலை 06.42 மணி துவங்கி, ஆகஸ்ட் 07ம் தேதி இரவு 09. 03 வரை பூரம் நட்சத்திரம் உள்ளது.


பெருமாளின் பரமபக்தரான பெரியாழ்வாருக்கு அருள் செய்வதற்காக அன்னை மகாலட்சுமியே, ஆண்டாளாக அவதரித்ததாகவும், பூமாதேவியின் மறு அவதாரம் தான் ஆண்டாள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சிறு வயது முதல் திருமாலை மட்டுமே தன்னுடைய கணவனாக நினைத்து வாழ்ந்து வந்த கோதையாகிய ஆண்டாள், தான் சூடி அழகு பார்த்த மாலையையே பெருமாளுக்கு அணிவித்து வந்தாள். இதனால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்ற பெயர் ஆண்டாளுக்கு ஏற்பட்டது. இறுதியாக, பெருமாளையே கணவனாக அடைந்து, ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதனுடன் சென்று ஐக்கியமானாள். அரங்கனுடன் ஆண்டாள் ஐக்கியமான தினமே ஆடிப்பூரம் என்றும் சொல்லப்படுகிறது. 




ஆடிப்பூம் 10 நாட்கள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் 10வது நாளில் ஆண்டாள், ரங்கநாதரின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த திருக்கல்யாண வைபவத்தை தரிசித்தால் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நிச்சயம் திருமணம் வரம் கைகூடும். அதே போல் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கும், அன்னை பராசக்தியும் வளையல் வாங்கி பக்தர்கள் தருவாள்கள். அம்மனுக்கு அணிவிக்கப்படும் இந்த வளையல்கள், கோவிலுக்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த வளையல்களை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால் விரைவில் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


வீட்டில் ஆண்டாளை வழிபடுபவர்கள் அம்மன் படத்திற்கு வளையலில் மாலை கட்டி அணிவிக்கலாம். இந்த நாளில் ஆண்டாளுக்கு கற்கண்டு சாதம் நைவேத்தியமாக படைத்து, துளசி மற்றும் தாமரை படைத்து வழிபடுவதால் ஆண்டாள், மகாலட்சுமி மற்றும் திருமாலின் அருள் கிடைக்கும்.


பெண்கள் ஆடிப்பூரத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் அவர்கள் வேண்டும் வரங்களை ஆண்டாள் வழங்குவாள் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை, வாரணம் ஆயிரம் ஆகியவற்றையும், லலிதா சகஸ்ரநாமமும் படிப்பது சிறப்பானதாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்