விருதுநகர்: ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடு குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். காரணம் இது வனப் பகுதியில் இருப்பதால். தினமும் இங்கு சாமி தரிசனம் செய்ய முடியாது. மாதத்திற்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என 8 நாட்களுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
சதுரகிரி மலைக்கு மற்ற அமாவாசைகளை விட ஆடி அமாவாசைக்கு தான் அதிகளவில் கூட்டம் வரும். இந்தாண்டு ஆகஸ்ட் 1 முதல் 5 ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அதே போல 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது.
இங்கு இரவில் தங்கக்கூடாது. அருகில் உள்ள ஓடைகளிலும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்களின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப்பாதையில் அனுமதியின்றி கடைகள் அமைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் முன்னேற்பாட்டு பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}