சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் திருமாவளவன் எழுதிய பாடல் வரிகளை கோட் செய்து ஆதவ் அர்ஜூனா ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு, அதே கவிதையை திருத்தம் செய்து பதில் பாட்டு போட்டு பதிலடி கொடுத்துள்ளார் வன்னி அரசு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சால் கட்சியில் கடும் அதிருப்தி எழுந்தது. இதையடுத்து அவரை நேற்று சஸ்பெண்ட் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார். ஆறு மாத காலம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஆயிரம் கைகள் மறைத்தாலும்… என்ற தலைப்பில் ஒரு எக்ஸ் தளப் பதிவை வெளியிட்டிருந்தார் ஆதவ் அர்ஜூனா. அதில் அவர் கூறியிருந்ததாவது:
'அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்.
தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன்.
தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள்.
கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.
ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை என்று கூறியிருந்தார் ஆதவ் அர்ஜூனா.
இந்தப் பதிவுக்கு அதே பாட்டையே மாற்றிப் போட்டு பதிலடி கொடுத்துள்ளார் வன்னி அரசு. அதில் அவர் கூறியிருப்பதாவது:
விடியாதோ
வாழ்க்கையென
விம்பி துடித்தபடி
விவரம் அறியாமல்- தன்
விழி கலங்கி நிற்பவனே!
புலராதோ
வாழ்க்கையென
பொற்கனவு கண்டபடி
பொழுதெல்லாம்
பாடுபட்டு- தினம்
புலம்பி தவிப்பவனே!
அடித்தாலும்
உதைத்தாலும்
அவமானம்
செய்தாலும்
ஆத்திரங்கொண்டு எழாமல்
மனிதன் என்பதே மறந்து
மாற்றானின்
கால் பிடித்து
தன்மானம் கெட்டு
வாழ்கிறாயே!
தானாக விடியுமென்று
தவறாக நம்பாதே
வீணாக மனம் நொந்து
எல்லாம் விதியென்று
வெம்பாதே
நீயாக முன் வந்து
நெருப்பாக
விழி சிவந்து
நிலையாக
போர் புரிந்தால் -உனக்கு
நிச்சயமாய்
விடியலுமுண்டு!
நெஞ்சில்
துணிச்சலின்றி
அஞ்சி ஒடுங்கி
கஞ்சி குடிப்பதற்கே
கெஞ்சி கிடக்கிறாயே! என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!
நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Manmohan singh.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை!
எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்
Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
{{comments.comment}}