திருப்பதி லட்டு வேணுமா?.. கையோட ஆதார் கார்டு எடுத்துட்டு வாங்க.. தேவஸ்தானம் புது ரூல்!

Aug 30, 2024,06:22 PM IST

திருமலை: திருப்பதி கோவிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


திருப்பதி என்றாலே பெருமாள் நினைவுக்கு வருகிறாறோ இல்லையோ லட்டு தான் நம்மில் பெரும்பாலானவர்களின் நினைவிற்கு வரும். பெருமாளை பார்க்க மட்டும் தான் கூட்டம் என்று இல்லை லட்டு வாங்கும் இடத்திலும் கூட்டம் அதிகமாக தான் இருக்கும். திருப்பதி என்றாலே லட்டு பிரசித்தம். அத்தகைய லட்டு பிரசாதம் வாங்குவதில் பல முறைகேடுகள் நடப்பதாக காலம் காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.


இந்த நடைமுறையின் படி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி தரிசனத்திற்கு மட்டுமின்றி, லட்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை காட்டாயம் என்று  தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பேசுகையில், திருமலை திருப்பதில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லட்டு பிரசாதத்தை வெளி மார்க்கெட்டில் விற்று வருகின்றனர். அதுமட்டும் இன்றி இடைதரகர்களின் தொல்லைகளும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.




அதன்படி, தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று தேவஸ்தான போர்டு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை பக்தர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுண்டர்களில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.


சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டுமே வாங்குபவர்களுக்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்ற நடைமுறை மாற்றப்பட்டதால், ஒரு நபர் 3 அல்லது 4 லட்டுகள் கூட கட்டணம் செலுத்தி பெற்று வருகின்றனர். இவ்வாறு வாங்கும் லட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன. இதை தவிர்க்கவே ஆதார் அட்டை கட்டாயம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


கூடுதலாக வழங்கப்படும் லட்டு பிரசாதம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, இது பக்தர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த தகவலை அறிந்த தேவஸ்தானம் மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே கூடுதல் லட்டு பிரசாதம் வழங்கப்படும் என பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது. தினசரி கூடுதல் லட்டு வழக்கம போல் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற தவறான தகவல்  பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்