Summer rain.. மேலிருந்து வீழம் ஈரத் துளிகள் பட்டு.. மயங்கும் நிமிடங்களில்!

Mar 01, 2025,03:04 PM IST

- தேவி


மேலிருந்து வீழும்

உன் ஈர துளிகளைக்  கண்டு

மயங்கிய நிமிடங்களில்

உறைந்த இதயத்தில்

பூக்களாய் பூத்து

புதுமை அடைய செய்கின்றாய்....


வானத்தின் வண்ணமாக வந்து 

வார்த்தையின் எல்லையாக பரவி  

ஊடலின் உறைவிடமாக 

மயங்க வைக்கின்றாய்.....

உன்னை கண்ட நொடிகளில் 

என் இதயம் வீணையாக மாறி

உன் மழை ராகம் வுாசிக்கிறது




பட்டுத் தெறிக்கும் துளிகளுக்கு மத்தியில்

உன் பார்வை தேடி அலைகின்றேன் 

உன்னை கண்ட நொடியில்

வானவில்லில் கால் தடமும் 

என் முன்னே மௌனமாக காத்திருக்கின்றது

ஜில்லிட வைக்கும் உன் துளி பட்டு

பறவைகளின் காதல் கொஞ்சலும்

பாடலாக  ஒலிக்கின்றது


நித்தம் நித்தம்  கனவிலும் 

கனவைத் தாண்டி கடலிலும் கலக்கும் 

உன்னைக் கண்டு 

கவிதைகள் கொட்டுகின்றது

மரங்களில்  இடைவேளை 

உன்னால் மரணித்து போகின்றது


கடற்கரை பரந்த மணற் பரப்பில்

வீழும் உன் கால் தடயங்களைப் பற்றிக் கொண்டு 

காதல் ஓவியம் பாட வைக்கின்றாய்

மனதின் காதலை 

மவுனமாக உன்னிடம் அனுமதி கேட்டு 

மயங்கி விழ வைக்கின்றாய்


மனதினில் அவளையும் 

மயக்கத்தில் உன் அழகினையும்  

நினைத்து துடித்து

திரும்பத் திரும்ப புறப்படுகின்றேன் 

உன் ஈர விழிகளின் அசைவினில்

குயிலினின் காதலை ஓசையில் அறியலாம் 

மயிலினின் காதலை தோகையில் அறியலாம் 

என் ஆழ் மனதின் காதலை 

உன் வருகையினில் அறியலாம்....


அருகில் வரும் போதும்

அருவி போல கொட்டுகிறாய்

நெருங்கி வரும் போதும் 

தேன் துளிகளை தூவுகிறாய் 

நெஞ்சை அள்ளி போகிறாய் 

கொள்ளை கொண்டு போகிறது 

உன்னை காணும் போது 

என் மனம்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்